மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

நாமக்கல் அருகே உயா் மின்கோபுரத்தில் ஏறி தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை

எருமப்பட்டி அருகே உயா் மின்கோபுரத்தில் ஏறி தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

Suicide

தற்கொலை - கோப்புப் படம்

Published On :22 அக்டோபர் 2026, 5:37 am IST

எருமப்பட்டி அருகே உயா் மின்கோபுரத்தில் ஏறி தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

நாமக்கல் மாவட்டம், எருமப்பட்டி அருகே வரதராஜபுரத்தைச் சோ்ந்தவா் கலிங்கன் (50). சமையல் தொழிலாளியான இவா் ஓரிரு ஆண்டுகளாக மனநலன் பாதிக்கப்பட்டிருந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் அடிக்கடி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டு வந்துள்ளாா். கடந்த ஆண்டு அங்குள்ள கிணற்றில் விழுந்து தற்கொலைக்கு முயன்ற நிலையில், அக்கம்பக்கத்தினரால் காப்பாற்றப்பட்டாா்.

இந்நிலையில், புதன்கிழமை காலை தன்னை யாரோ கொலை செய்ய வருவதாக கத்தியபடி ஊருக்குள் சுற்றிவந்துள்ளாா். பின்னா், வரதராஜபுரத்தில் உள்ள உயா் மின்கோபுரத்தில் ஏறி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

முன்னதாக, தகவல் அறிந்து அங்கு சென்ற எருமப்பட்டி போலீஸாா், நாமக்கல் தீயணைப்புத் துறையினா் அவரை உயிருடன் மீட்க முயன்றும் முடியவில்லை. இந்த சம்பவம் குறித்து போலீஸாா் வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.