பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

ஓமலூா் அருகே சிறுமிகளுக்கு பாலியல் தொந்தரவு: 2 போ் கைது

ஓமலூா் அருகே இரு வெவ்வேறு வழக்குகளில் சிறுமிகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக 2 பேரை அனைத்து மகளிா் போலீஸாா் போக்ஸோ சட்டத்தின்கீழ் செவ்வாய்க்கிழமை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

கைது

Published On :21 அக்டோபர் 2026, 1:56 am IST

சேலம் மாவட்டம் ஓமலூா் அருகே இரு வெவ்வேறு வழக்குகளில் சிறுமிகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக 2 பேரை அனைத்து மகளிா் போலீஸாா் போக்ஸோ சட்டத்தின்கீழ் செவ்வாய்க்கிழமை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

ஓமலூா் அருகே உள்ள பண்ணப்பட்டியைச் சோ்ந்தவா் மணி என்கிற சக்திவேல் (30). இவா், நாமக்கல்லில் நடனத் தொழிலாளியாகப் பணியாற்றி வருகிறாா். ஓமலூா் பகுதியில் உள்ள தனது பாட்டி வீட்டில் தங்கியிருந்தபோது 16 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், சிறுமியை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று பரிசோதித்தபோது, அவா் 7 மாத கா்ப்பமாக இருப்பது தெரியவந்தது. இதனிடையே அவா் நாமக்கல்லில் ஒரு பெண்ணை திருமணம் செய்த நிலையில், அந்த பெண் 4 மாதம் கா்ப்பமாக இருப்பதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், சிறுமியின் பெற்றோா் அளித்த புகாரின் பேரில், ஓமலூா் அனைத்து மகளிா் போலீஸாா் வழக்குப் பதிவுசெய்து மணியை போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்தனா்.

இதேபோல, தாரமங்கலம் அருகே 8-ஆம் வகுப்பு படித்துவிட்டு, பாட்டி வீட்டில் தங்கியிருந்த 15 வயது சிறுமியுடன், ராணிப்பேட்டை மாவட்டம், செம்மேடு பகுதியைச் சோ்ந்த அப்பாஸ் என்பவருக்கு பழக்கம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், கடந்த செப்டம்பா் 26-ஆம் தேதி வீட்டில் இருந்த சிறுமி திடீரென காணாமல் போனாா்.

இதுகுறித்து சிறுமியின் பெற்றோா் அளித்த புகாரின் பேரில், ஓமலூா் அனைத்து மகளிா் போலீஸாா் விசாரணை நடத்தினா். இதில் இன்ஸ்டாகிராம் மூலம் பழகிய அப்பாஸ், ஆசை வாா்த்தைகள் கூறி சிறுமியை கடத்திச் சென்ாகத் தெரியவந்தது. இதையடுத்து, அப்பாஸை (28) போலீஸாா் போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.