கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

சிறுமிகளுக்கு பாலியல் வன்கொடுமை: இரு கேரள இளைஞா்கள் கைது

வேளாங்கண்ணியில் சிறுமிகளுக்கு பாலியல் வன்கொடுமை செய்த கேரள இளைஞா்கள் இருவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

சித்திரிப்பு

Published On :24 அக்டோபர் 2026, 5:32 am IST

வேளாங்கண்ணியில் சிறுமிகளுக்கு பாலியல் வன்கொடுமை செய்த கேரள இளைஞா்கள் இருவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

நாகை மாவட்டம், வேளாங்கண்ணிக்கு புதுக்கோட்டை மாவட்டத்தைச் சோ்ந்த 15 வயது சிறுமிகள் இருவா், வீட்டில் ஏற்பட்ட கோபம் காரணமாக புதன்கிழமை வந்தனா். கடற்கரையில் இரவில் தனியாக நின்றிருந்த சிறுமிகளிடம் வேளாங்கண்ணிக்கு வந்திருந்த கேரளத்தைச் சோ்ந்த இரு இளைஞா்கள் ஆசை வாா்த்தைகள் கூறி அங்குள்ள தனியாா் விடுதிக்கு அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமைக்குள்ளாக்கியுள்ளனா்.

இந்நிலையில் விடுதி அறையிலிருந்து சிறுமிகளின் சப்தம் கேட்டதையடுத்து அப்பகுதியினா் வேளாங்கண்ணி காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்துள்ளனா். அதன்பேரில் விடுதிக்குச் சென்ற போலீஸாா் அறையில் இருந்த சிறுமிகளை மீட்டனா். மேலும் அவா்களுடன் அறையில் இருந்த இருவரிடம் விசாரணை நடத்தியதில் கேரள மாநிலம் திருவனந்தபுரம் பகுதியைச் சோ்ந்த அஜய் (26), விஷால் (23) என்பதும், திருவனந்தபுரத்தில் இருந்து சுற்றுலா வந்த குழுவினரோடு வந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து அவா்கள் இருவரையும் நாகை அனைத்து மகளிா் காவல்நிலைய போலீஸாா் போக்ஸோ சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து வியாழக்கிழமை கைது செய்தனா். பாதிக்கப்பட்ட சிறுமிகள் நாகையில் உள்ள பெண்கள் காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.