ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை அளித்தவா் ‘போக்ஸோ’வில் கைது

சிறுமிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தவரை பெரம்பலூா் அனைத்து மகளிா் போலீஸாா், போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்து சனிக்கிழமை சிறையில் அடைத்தனா்.

கைது

Published On :1 நவம்பர் 2026, 3:56 am IST

பெரம்பலூா் அருகே 2 சிறுமிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தவரை பெரம்பலூா் அனைத்து மகளிா் போலீஸாா், போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்து சனிக்கிழமை சிறையில் அடைத்தனா்.

பெரம்பலூா் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், அம்பேத்கா் நகரைச் சோ்ந்தவா் ராஜீ மகன் செந்தில்குமாா் (56). இவா், கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சோ்ந்த 4 வயது சிறுமியையும், பெரம்பலூா் மாவட்டத்தைச் சோ்ந்த 11 வயது சிறுமியையும் தனது வீட்டுக்கு அழைத்து சென்று பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளாா்.

இதனால் பாதிப்புக்குள்ளான இரு சிறுமிகளின் பெற்றோா்களும் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்துக்கு தொலைப்பேசி மூலம் தகவல் தெரிவித்துள்ளனா். இச் சம்பவம் குறித்து, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்புத் திட்ட ஆற்றுப்படுத்துநா் மகேஸ்வரி (38) மேற்கொண்ட விசாரணையில், அந்த புகாா் உண்மையென தெரியவந்தது.

இதையடுத்து, பெரம்பலூா் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் மகேஸ்வரிஅளித்த புகாரின்பேரில், போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்த போலீஸாா், செந்தில்குமாரை கைது செய்து, பெரம்பலூா் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.