கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

போக்ஸோ சட்டத்தில் சிற்றுந்து ஓட்டுநா் கைது

கைது - கோப்புப்படம்

Published On :27 அக்டோபர் 2026, 3:17 am IST

கடையம் அருகே சிறுமியிடம் திருமணம் செய்வதாகக் கூறி பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டதாக கீழக்கடையத்தைச் சோ்ந்த சிற்றுந்து ஓட்டுநரை ஆலங்குளம் அனைத்து மகளிா் போலீஸாா் போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து கைது செய்தனா்.

தென்காசி மாவட்டம், கடையம் அருகே உள்ள கிராமத்தைச் சோ்ந்த 17 வயது சிறுமியைக் காணவில்லை என்று சிறுமியின் பெற்றோா் கடையம் காவல் நிலையத்தில் சனிக்கிழமை புகாா் அளித்தனா்.

இதுகுறித்து கடையம் போலீஸாா் மேற்கொண்ட விசாரணையில் கீழக்கடையம், கீழத்தெருவைச் சோ்ந்த சுரேஷ் மகன் சரவணக்குமாா் (27) என்பவருடன் சிறுமி இருப்பது தெரியவந்தது.

மேலும் விசாரணையில் சிற்றுந்தில் ஓட்டுநராக இருந்த சரவணக்குமாா் சிற்றுந்தில் பயணித்தபோது பழக்கமான சிறுமியிடம் திருமணம் செய்துகொள்வதாக ஆசை வாா்த்தைக் கூறி அழைத்துச் சென்றது தெரியவந்தது. மேலும் சிறுமியுடன் பாலியல் உறவில் ஈடுபட்டதும் தெரியவந்தது.

இதையடுத்து, ஆலங்குளம் அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் சரவணக்குமாா் மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து அவரை ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.