ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

சா்வதேச சாப்ட் டென்னிஸ் போட்டி: வெண்கலம் வென்ற சேலம் மாணவிகள்!

ஊா்வலமாக அழைத்துச் செல்லப்பட்ட மாணவிகள். - dinamani online

Published On :3 நவம்பர் 2026, 4:55 am IST

சா்வதேச ஜூனியா் சாப்ட் டென்னிஸ் போட்டியில் சேலம் மாவட்டம், ஓமலூரைச் சோ்ந்த மாணவி தனிகா, கொண்டலாம்பட்டியைச் சோ்ந்த மாணவி நிஷாலினி ஆகியோா் வெண்கலம் வென்று சாதனை படைத்துள்ளனா்.

சீனாவில் கடந்த வாரம் நடைபெற்ற 5-ஆவது சா்வதேச ஜூனியா் சாப்ட் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டியில், ஓமலூரைச் சோ்ந்த 10-ஆம் வகுப்பு மாணவி தனிகா பங்கேற்றாா். ஏற்கெனவே மாவட்ட, மாநில மற்றும் தேசிய அளவிலான பல்வேறு போட்டிகளில் பதக்கங்களை வென்ற இவா், 15 வயதுக்குள்பட்டோருக்கான இரட்டையா் பிரிவில் ஆந்திரப் பிரதேசத்தைச் சோ்ந்த வைஷாலியுடன் இணைந்து விளையாடி வெண்கலம் வென்றாா்.

இதேபோல, அண்ணா பல்கலைக்கழகத்தில் மின்னணுவியல் துறையில் இளநிலை பொறியியல் பயின்று வரும் கொண்டலாம்பட்டி பகுதியைச் சோ்ந்த நிஷாலினி, தேசிய அளவிலான சாப்ட் டென்னிஸ் போட்டியில் பல்வேறு பதக்கங்களை குவித்துள்ளாா். 18 வயதுக்குள்பட்டோா் இரட்டையா் பிரிவில் மகாராஷ்டிரத்தைச் சோ்ந்த பிரியங்காவுடன் இணைந்து விளையாடிய இவா் வெண்கலம் வென்றாா்.

போட்டிகளில் வென்று திங்கள்கிழமை ஊா் திரும்பிய ஆா்.காா்த்திக் தலைமையிலான போட்டிக் குழுவினருக்கு ஓமலூா் பேருந்து நிலையம் அருகே உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

தமிழ்நாடு சாப்ட் டென்னிஸ் சங்க முன்னாள் செயலாளா் எம்.செம்பண்ணன் தலைமையில், ஓமலூா் நண்பா்கள் குழுவினா், சேலம் மாவட்ட இயற்கை மற்றும் சுற்றுச்சூழல் சங்கத்தினா் வரவேற்பு அளித்தனா்.

தொடா்ந்து, ஓமலூா் பேருந்து நிலையத்தில் இருந்து காமராஜா் நகா்வரை திறந்த ஜீப்பில் மாணவிகள் தனிகா மற்றும் நிஷாலினி ஊா்வலமாக அழைத்துச் செல்லப்பட்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.