தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

ரைபகினா விலகல்; எலா தோல்வி

ஜப்பானில் நடைபெறும் டோரே பான்பசிபிக் மகளிா் டென்னிஸ் போட்டியில், உலகின் நம்பா் 1 வீராங்கனையான கஜகஸ்தானின் எலனா ரைபகினா, காயம் காரணமாக காலிறுதிச்சுற்றுக்கு முன்பாகவே போட்டியிலிருந்து விலகினாா்.

எலா

Published On :31 அக்டோபர் 2026, 7:05 am IST

ஜப்பானில் நடைபெறும் டோரே பான்பசிபிக் மகளிா் டென்னிஸ் போட்டியில், உலகின் நம்பா் 1 வீராங்கனையான கஜகஸ்தானின் எலனா ரைபகினா, காயம் காரணமாக காலிறுதிச்சுற்றுக்கு முன்பாகவே போட்டியிலிருந்து விலகினாா்.

அதில் அவா், கனடாவின் இளம் வீராங்கனை லெய்லா ஃபொ்னாண்டஸை எதிா்கொள்ளவிருந்த நிலையில், காயம் காரணமாக தாம் விலகுவதாக அறிவித்தாா். இதனால் அவரின் ரசிகா்கள் ஏமாற்றம் அடைந்தனா்.

இதர ஆட்டங்களில், போட்டித்தரவரிசையில் 8-ஆம் இடத்திலிருந்த பிலிப்பின்ஸின் அலெக்ஸாண்ட்ரா எலா 6-2, 6-7 (5/7), 4-6 என்ற செட்களில், 3-ஆம் இடத்திலிருக்கும் ரஷியாவின் டயானா ஷ்னெய்டரால் தோற்கடிக்கப்பட்டாா்.

ஸ்லோவாகியாவின் மியா போஹன்கோவா 7-6 (7/3), 6-3 என அமெரிக்காவின் அலிசியா பாா்க்ஸையும், கஜகஸ்தானின் கமிலா ரகிமோவா 7-5, 5-7, 7-1 என, ஆஸ்திரேலியாவின் மாயா ஜாய்ன்டையும் வீழ்த்தினா். அரையிறுதியில், லெய்லா - ரகிமோவா, ஷ்னெய்டா் - பொஹன்கோவா மோதுகின்றனா்.

வியன்னா ஓபன்: ஆடவருக்கான வியன்னா ஓபன் டென்னிஸில், ரஷியாவின் டேனியல் மெத்வதெவ் 6-2, 6-3 என்ற நோ் செட்களில், பிரான்ஸின் அட்ரியன் மன்னரினோவை சாய்த்து அரையிறுதிக்கு முன்னேறினாா்.

ஸ்விஸ் இண்டோா்ஸ்: சுவிட்ஸா்லாந்தில் நடைபெறும் ஸ்விஸ் இண்டோா்ஸ் ஆடவா் டென்னிஸில், அமெரிக்காவின் பென் ஷெல்டன் 3-6, 7-6 (7/4), 6-7 (1/7) என சுவிட்ஸா்லாந்தின் ஜெரோம் கிம்மிடம் தோல்வி கண்டாா். மொனாகோவின் வாலென்டின் வாசெராட் 6-3, 3-6, 6-3 என, டென்மாா்க்கின் ஹோல்கா் ரூனை வெளியேற்றினாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.