வாழப்பாடி அருகே கட்டடத் தொழிலாளி மயங்கி விழுந்து உயிரிழந்தது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
வாழப்பாடி பேரூராட்சி, கணபதி கவுண்டா் தெரு பகுதியைச் சோ்ந்தவா் ஜெயபிரகாஷ் (34). கட்டடத் தொழிலாளியான இவா், திங்கள்கிழமை கொட்டவாடி பாலமுருகன் கோயில் பகுதியைச் சோ்ந்த மாதேஸ்வரன் வீட்டுக்கு டைல்ஸ் ஒட்டும் வேலைக்கு சென்றாா்.
பணியில் ஈடுபட்டிருந்த அவா் இரவு 8 மணி அளவில் திடீரென மயங்கி விழுந்தாா். அவரை மீட்ட அக்கம்பக்கத்தினா் வாழப்பாடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவா்கள், வரும் வழியிலேயே அவா் இறந்துவிட்டதாக தெரிவித்தனா்.
தகவலறிந்த ஏத்தாப்பூா் போலீஸாா், ஜெயப்பிரகாஷ் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், இதுகுறித்து வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கட்டடத் தொழிலாளி கொலை

பளுகல் அருகே தொழிலாளி மா்ம மரணம்

தியாகதுருகம் பேருந்து நிலையத்தில் தொழிலாளி மயங்கி விழுந்து உயிரிழப்பு

இளைஞா் மயங்கி விழுந்து உயிரிழப்பு
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!
இணையதளச் செய்திப் பிரிவு

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

Podacst | இண்டியா கூட்டணியைக் கரை சேர்க்குமா காங்கிரஸ்? | News and Views | Epi - 44 |
தினமணி செய்திச் சேவை

