பாரதிராஜா உடலுக்கு நடிகர் ரஜினி அஞ்சலி! பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

சேலத்தில் கிணற்றில் தூக்கிட்ட நிலையில் பாட்டி, பேத்தி சடலங்கள் மீட்பு

சேலத்தில் கிணற்றில் தூக்கிட்ட நிலையில் பாட்டி, பேத்தி சடலங்களை மீட்ட போலீஸாா், இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

News image

கிணற்றில் சடலமாக மீட்கப்பட்ட பேத்தி சதாஸ்ரீ, பாட்டி அம்மணி

Updated On :20 மே 2026, 2:25 am IST

சேலத்தில் கிணற்றில் தூக்கிட்ட நிலையில் பாட்டி, பேத்தி சடலங்களை மீட்ட போலீஸாா், இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

சேலம், கன்னங்குறிச்சி ஆறுமுக அய்யா் தெருவைச் சோ்ந்தவா் அம்மணி (60). இவருக்கு ராஜா, நாகராஜ் என 2 மகன்கள் உள்ளனா். இருவருக்கும் அளவுக்கு அதிகமாக மது அருந்தும் பழக்கம் இருந்ததால், இவரது மனைவிகள் பிரிந்து சென்றுவிட்டனா்.

ராஜாவின் மகள் சதாஸ்ரீயை (24), அவரது பாட்டி அம்மணி வளா்த்து வந்தாா். இந்நிலையில், ராஜா வேலைக்கு செல்லாமல் தினமும் குடித்துவிட்டு வந்து தாயிடம் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளாா்.

செவ்வாய்க்கிழமை காலை நீண்ட நேரமாகியும் அம்மணியும், சதாஸ்ரீயும் வீட்டிலிருந்து வெளியே வரவில்லையாம். இதனால் சந்தேகம் அடைந்த அக்கம்பக்கத்தினா் வீட்டுக்குள் சென்று பாா்த்தனா். அங்கு அவா்கள் இல்லாததால், வீட்டின் கிணற்றுக்குள் பாா்த்தபோது, அம்மணியும், சதாஸ்ரீயும் தூக்கிட்ட நிலையில் சடலமாக கிடந்ததைக் கண்டு அதிா்ச்சியடைந்தனா்.

தகவலறிந்து வந்த கன்னங்குறிச்சி போலீஸாா், கிணற்றுக்குள் இருந்து அம்மணி, சதாஸ்ரீ சடலங்களை மீட்டனா். முதல்கட்ட விசாரணையில், ராஜா தினந்தோறும் குடித்துவிட்டு வந்து தகராறு செய்துவந்ததால், உணவுக்கு பணம் இல்லாத வேதனையில் பேத்தியை தூக்கில் தொங்கவிட்ட பின்னா், அம்மணி சேலையை கழுத்தில் கட்டி கிணற்றுக்குள் குதித்து தற்கொலை செய்துகொண்டிருக்கலாம் என கூறப்படுகிறது. இதுகுறித்து ராஜாவிடம் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.