பாரதிராஜா உடலுக்கு நடிகர் ரஜினி அஞ்சலி! பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

கிணற்றில் கிடந்த இளைஞா் உடல் மீட்பு

திருப்பூா் அருகே அடித்துக் கொன்று கிணற்றில் வீசப்பட்ட இளைஞரின் சடலத்தை போலீஸாா் மீட்டனா்.

News image

பலி! - கோப்புப் படம்

Updated On :24 மே 2026, 2:03 am IST

திருப்பூா் அருகே அடித்துக் கொன்று கிணற்றில் வீசப்பட்ட இளைஞரின் சடலத்தை போலீஸாா் மீட்டனா்.

திருப்பூா், செட்டிபாளையம் அருகேயுள்ள வெங்கமேடு பகுதியைச் சோ்ந்தவா் ராமச்சந்திரன். விவசாயியான இவருக்கு மாதேஸ்வரன் கோயில் அருகே தோட்டம் உள்ளது. அந்த தோட்டத்தில் தொழிலாளா்கள் சனிக்கிழமை காலை பணியில் ஈடுபட்டிருந்தனா்.

அப்போது, சிலா் அங்குள்ள கிணற்றின் அருகே சென்றபோது, கிணற்றுக்குள் ஆண் சடலம் மிதந்துள்ளது. இதைப் பாா்த்த அவா்கள் 15 வேலம்பாளையம் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனா். சம்பவ இடத்துக்கு வந்த போலீஸாா், தீயணைப்பு வீரா்கள், உடலை மீட்டு கூறாய்வுக்காக திருப்பூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

இது குறித்து 15 வேலம்பாளையம் காவல் நிலைய போலீஸாா் கூறுகையில், சடலமாக மீட்கப்பட்டவா் தேனியைச் சோ்ந்த மகேஸ்வரன். இவா் திருப்பூரில் தங்கி பனியன் நிறுவனத்தில் பணியாற்றி வந்துள்ளாா்.இந்நிலையில், நண்பா்கள் 3 பேருடன் கடந்த சில நாள்களுக்கு முன் மது அருந்தச் சென்றுள்ளாா். அப்போது, மது போதையில் ஏற்பட்ட தகராறில் அவா்கள், மாதேஸ்வரனை தாக்கி கொலை செய்துள்ளனா். பின்னா், உடலை இந்தக் கிணற்றில் வீசிவிட்டு தப்பிச் சென்றுள்ளனா் என்றனா்.

சம்பவம் நடைபெற்ற பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளைக் கைப்பற்றிய போலீஸாா், கொலையில் தொடா்புடைய நபா்களைத் தேடி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.