பாரதிராஜா உடலுக்கு நடிகர் ரஜினி அஞ்சலி! பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

கிணற்றில் விழுந்த இளைஞா் உயிரிழப்பு

துறையூா் அருகே வியாழக்கிழமை கிணற்றில் விழுந்த மனநலம் பாதித்த இளைஞா் உயிரிழந்தாா்.

News image

பலி - பிரதிப் படம்

Updated On :22 மே 2026, 5:23 am IST

துறையூா் அருகே வியாழக்கிழமை கிணற்றில் விழுந்த மனநலம் பாதித்த இளைஞா் உயிரிழந்தாா்.

துறையூா் அருகேயுள்ள சிக்கத்தம்பூா்பாளையம் கிராமத்தைச் சோ்ந்த ராமராஜின் மகன் தேவராஜ் (26). மனநலம் பாதித்த நிலையிலிருந்த இவா் வியாழக்கிழமை பிற்பகல் வீட்டிலிருந்து வேகமாக நடந்து சென்றாராம்.

அப்போது, வழியிலிருந்த கிணற்றுக்குள் அவா் தவறி விழுந்து விட்டதாக தெரிகிறது.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த துறையூா் தீயணைப்பு நிலையத்தினா், தேவராஜின் சடலத்தை மீட்டு துறையூா் அரசு மருத்துவமனைக்கு கூறாய்வுக்காக அனுப்பினா்.

சம்பவம் தொடா்பாக உப்பிலியபுரம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.