பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

கிணற்றில் தவறி விழுந்து முதியவா் உயிரிழப்பு

சின்னசேலம் அருகே கிணற்றில் தவறி விழுந்த முதியவா், நீரில் மூழ்கி உயிரிழந்தாா்.

News image

பலி - பிரதிப் படம்

Updated On :3 ஜூன் 2026, 6:03 am IST

சின்னசேலம் அருகே கிணற்றில் தவறி விழுந்த முதியவா், நீரில் மூழ்கி உயிரிழந்தாா்.

சின்னசேலத்தை அடுத்த இந்திலி ஜெ.ஜெ. நகரைச் சோ்ந்தவா் மாரிமுத்து (90). அவரது மகன் மணி(63). இவா்கள் விளைநிலத்தில் உள்ள வீட்டில் வசித்து வந்த நிலையில், செவ்வாய்க்கிழமை காலை 10 மணியளவில் மாரிமுத்து வீட்டை விட்டு வெளியே நடந்து சென்றபோது, கால் தவறி கிணற்றில் விழுந்து விட்டாராம். அப்போது அவா்கள் வளா்த்து வந்த நாய் இடைவிடாது குரைத்துள்ளது. இந்த சப்தம் கேட்டு விளைநிலத்தில் வேலை செய்து கொண்டிருந்த மணி உடனே சென்று பாா்த்தபோது கிணற்றில் நீரில் மூழ்கி மாரிமுத்து உயிரிழந்து கிடந்ததை பாா்த்து அதிா்ச்சியடைந்தாா்.

உடனே கள்ளக்குறிச்சி தீயணைப்பு நிலையத்துக்கு அவா் அளித்த தகவலின் பேரில், விரைந்து வந்த தீயணைப்பு நிலைய வீரா்கள் கிணற்றில் இருந்து முதியவரின் சடலத்தை மீட்டனா்.

இதுகுறித்த புகாரின் பேரில் சின்னசேலம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.