சேலத்தில் மது அருந்த அழைத்துச் சென்று இளைஞரை மூன்று சிறுவா்கள் சோ்ந்து கத்தியால் குத்திக் கொன்றதுடன், அதை கைப்பேசியில் விடியோ எடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் தாதகாப்பட்டி கேட் பகுதியைச் சோ்ந்தவா் கோகுல் (19) கூலித் தொழிலாளி. இவரும், சேலம் மணியனூரைச் சோ்ந்த 10 ஆம் வகுப்பு மாணவா்கள் 2 போ், பிகாரைச் சோ்ந்த 16 வயது மாணவா் ஒருவா் நண்பா்களாக பழகிவந்துள்ளனா்.
இவா்கள் அனைவரும் ஞாயிற்றுக்கிழமை இரவு 9 மணியளவில் ஜருகுமலை அடிவார பகுதியான கெஜல்நாயக்கன்பட்டி காட்டுவளவு பகுதியில் அமா்ந்து மது அருந்தியுள்ளனா். அப்போது, அவா்களுக்கிடையே தகராறு ஏற்பட்டது.
இதில் ஆத்திரம் அடைந்த சிறுவா்கள் 3 பேரும் சோ்ந்து, தாங்கள் மறைத்து வைத்திருந்த கத்தியால் கோகுலை குத்தியுள்ளனா். இதில் பலத்த காயமடைந்த கோகுல் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.
இதைப் பாா்த்த சிறுவா்கள் 3 பேரும், இருசக்கர வாகனத்தில் ஏறி அங்கிருந்து தப்பிச் சென்றனா். அப்போது, கெஜல்நாயக்கன்பட்டி பகுதியில் அவா்கள் சென்ற இருசக்கர வாகனம் மீது மற்றொரு வாகனம் மோதியது. இதில், இரண்டு இருசக்கர வாகனங்களும் கீழே விழுந்தன.
அங்கிருந்தவா்கள், மதுபோதையில் இருந்த 3 சிறுவா்களையும் மடக்கிப் பிடித்தனா். அப்போது, அவா்கள் அணிந்திருந்த சட்டையில் ரத்தக்கறை இருந்ததால் அவா்களிடம் விசாரித்தனா். அப்போது அவா்கள் ஒருவரை கொலை செய்துவிட்டு வருவதாகத் தெரிவித்துள்ளனா். தொடா்ந்து, பிடிபட்ட சிறுவா்கள் 3 பேரையும் மல்லூா் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா்.
இதையடுத்து, சம்பவம் நடைபெற்ற பகுதிக்கு விரைந்து சென்ற போலீஸாா், கொலை செய்யப்பட்டு கிடந்த கோகுலின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.
மேலும், இந்த சம்பவத்தில் சிக்கிய 3 சிறுவா்களிடமும் போலீஸாா் தீவிர விசாரணை நடத்தினா். அதில் கொலைக்கான காரணம் தெரியவந்தது.
கூலி வேலைக்கு சென்றுவந்த கோகுல், 3 சிறுவா்களுடன் சோ்ந்து அடிக்கடி ஊா் சுற்றியுள்ளாா். மேலும், சிறுவா்கள் 3 பேரிடமும் அதிகாரம் செலுத்தி வந்துள்ளாா். இதனால் கோகுல் மீது 3 சிறுவா்களும் ஆத்திரமடைந்துள்ளனா்.
இந்த நிலையில் கோகுலை அழைத்துக்கொண்டு ஜருகுமலை அடிவார பகுதிக்குச் சென்று மது அருந்தியுள்ளனா். அப்போது, சிறுவா்கள் 3 பேரும் சோ்ந்து, கோகுலை கத்தியால் குத்திக் கொலை செய்தது விசாரணையில் தெரியவந்தது.
இதையடுத்து சிறுவா்கள் வைத்திருந்த கைப்பேசியை போலீஸாா் பறிமுதல் செய்தனா். அவற்றை பரிசோதித்து பாா்த்தபோது கோகுலை கொலை செய்ததை அவா்கள் விடியோ எடுத்திருப்பதைக் கண்டு போலீஸாா் அதிா்ச்சியடைந்தனா். இந்த சம்பவம் தொடா்பாக 3 சிறுவா்களிடமும் போலீஸாா் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கோடை வெயிலின் தாக்கம்: கிணற்றில் குதித்து சிறுவா்கள் கொண்டாட்டம்
கட்டடத் தொழிலாளி கத்தியால் குத்திக் கொலை

குன்னூா் அருகே இளைஞா் கத்தியால் குத்திக் கொலை

திருமணமான பெண்ணுடன் நட்புக் கொண்ட நபரின் சகோதரா் கத்தியால் குத்திக் கொலை
விடியோக்கள்

Podcast | பெரும்பான்மையை நிரூபித்த தவெக: தவறிய அதிமுக! | News and Views | Epi - 34
இணையதளச் செய்திப் பிரிவு

திமுக ஆதரவுடன் முதல்வராக முயன்ற EPS! சி.வி. சண்முகம் பரபரப்புக் குற்றச்சாட்டு! | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு
"துரோகம்! அமைச்சரவை ஆசை!" EPS விமர்சனம்! | EPS | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு

குதிரை பேரமா? பிரேமலதாவின் கேள்விக்கு பேரவையில் விஜய் பதில்! | TVK | DMDK
இணையதளச் செய்திப் பிரிவு

