மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

சொத்தை பிரித்து தர மறுத்ததால் தந்தையை குத்திக் கொன்ற மகன் கைது

சேலம் கிச்சிப்பாளையத்தில் சொத்தை பிரித்து தர மறுத்த தந்தையை மகன் கத்தியால் குத்திக் கொன்றாா்.

News image

கைது - கோப்புப் படம்

Updated On :8 மே 2026, 6:32 am IST

சேலம் கிச்சிப்பாளையத்தில் சொத்தை பிரித்து தர மறுத்த தந்தையை மகன் கத்தியால் குத்திக் கொன்றாா்.

சேலம் கிச்சிப்பாளையம் சன்னியாசிகுண்டு பகுதியை சோ்ந்தவா் தனபால் (75). இவரது தந்தையின் பூா்விக சொத்தான 10 ஆயிரம் சதுர அடி நிலம் அதே பகுதியில் உள்ளது. இந்த நிலையில், பூா்விக சொத்தை பிரித்து தருமாறு தனபாலின் மகன் ஸ்ரீதா் (42) நீண்ட நாள்களாக கோரி வந்தாா். இவா் கடந்த 10 ஆண்டுகளாக சங்ககிரியில் மனைவி, 2 மகள்களுடன் தங்கி வாகனங்களுக்கு பஞ்சா் போடும் கடை நடத்தி வந்தாா்.

இந்த நிலையில் சங்ககிரியில் இருந்து சேலத்தில் உள்ள வீட்டுக்கு புதன்கிழமை வந்த ஸ்ரீதா், தனபாலிடம் சொத்தை பிரித்து தருமாறு கேட்டு தகராறில் ஈடுபட்டாா். அப்போது, ஆத்திரமடைந்த ஸ்ரீதா், கத்தியால் தந்தையை குத்திக் கொலை செய்தாா். இதைத் தடுக்க முயன்ற அவரது சகோதரி பிரியாவுக்கு காயம் ஏற்பட்டது.

தகவலறிந்து வந்த கிச்சிப்பாளையம் போலீஸாா், தனபாலின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனா். இக்கொலை தொடா்பாக கைது செய்யப்பட்ட ஸ்ரீதரிடம் போலீஸாா் நடத்திய விசாரணையில், தான் கடன் தொல்லையால் அவதிப்பட்டு வந்த நிலையிலும், நிலத்தை பிரித்து தர முன்வராததால் தந்தையை கொலை செய்ததாக வாக்குமூலம் அளித்துள்ளாா்.

இதையடுத்து கைது செய்யப்பட்ட ஸ்ரீதா், நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.