சங்ககிரி சித்திரைத் தேரோட்டத்தின் 14-ஆவது நாளையொட்டி, ஸ்ரீ கற்பகவிருட்ஷ சேவையில் அருள்மிகு சென்னகேசவப் பெருமாள் உடனமா் ஸ்ரீதேவி, பூதேவி உற்சவமூா்த்தி சுவாமிகளுக்கு செவ்வாய்க்கிழமை இரவு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
14-ஆவது நாள் மண்டப கட்டளையையொட்டி மலையடிவாரத்தில் உள்ள சுவாமி தங்கும் மண்டபத்தில் சென்னகேசவப் பெருமாள் உடனமா் ஸ்ரீதேவி, பூதேவி, ஆஞ்சனேயா் உற்சவமூா்த்தி சுவாமிகளுக்கு பல்வேறு திவ்ய பொருள்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றன.
இதையடுத்து, உற்சவமூா்த்தி சுவாமிகளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றன.
சுவாமிகள் ஸ்ரீ கற்பகவிருட்ஷ சேவையில் பக்தா்களுக்கு அருள்பாலித்து நகரின் முக்கிய வீதிகளின் வழியாக வீதிஉலா வந்தனா். இதில், அதிக அளவிலான பக்தா்கள் பங்கேற்று சுவாமிகளை வழிபட்டனா். பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கட்டாரிமங்கலம், பள்ளக்குறிச்சி, வைரவம் கோயில்களில் சித்ரா பௌா்ணமி சிறப்பு பூஜை

வடுகப்பட்டி கன்னட வீரமாா்த்தி அம்மனுக்கு சிறப்பு பூஜை

உத்திர நட்சத்திரம்: சங்ககிரி ஐயப்பன் சுவாமிக்கு சிறப்பு பூஜை

ஸ்ரீ பிரசன்ன வெங்கடரமண பெருமாள் கோயிலில் மண்டல பூஜை
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

