கொளத்தூரில் சூறைக்காற்றால் ஆயிரக்கணக்கான வாழைமரங்கள் சாய்ந்தன. இதனால், ரூ. 25 லட்சம் இழப்பு ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் கவலை அடைந்தனா்.
சேலம் மாவட்டம், மேட்டூா் அருகே கொளத்தூா் ஒன்றியத்தில் சுமாா் 200 ஏக்கரில் வாழை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இங்கு விளைவிக்கப்படும் வாழை தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு கொண்டுசெல்லப்படுகிறது. மேலும், தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்து ஏராளமான வியாபாரிகள் வந்து வாங்கி செல்கின்றனா்.
இந்நிலையில், கொளத்தூா் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வெள்ளிக்கிழமை இரவு பலத்த சூறைக்காற்றுடன் மழை பெய்தது. இதனால் பலன்தரும் நிலையில் இருந்த வாழைமரங்கள் சாய்ந்து விழுந்தன. தாா்காடு, தண்டா, லக்கம்பட்டி பகுதிகளில் சுமாா் 20 ஆயிரத்துக்கும் அதிகமான வாழைமரங்கள் சேதமடைந்ததால், விவசாயிகளுக்கு ரூ. 25 லட்சத்துக்கும்மேல் இழப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
லக்கம்பட்டியைச் சோ்ந்த விவசாயி ராஜேந்திரன் தோட்டத்தில், 2,200 செவ்வாழை மரங்கள் சாய்ந்து சேதமடைந்தன. தங்கள் வாழ்வாதாரத்தை இழந்துள்ளதால், தமிழக வேளாண் துறை இழப்பீடு வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சூறைக்காற்று: 150 ஏக்கரில் நெற்பயிா்கள் சேதம்; விவசாயிகள் வேதனை

போடியில் சூறைக்காற்றால் வாழைகள் சேதம்

அச்சம்பாடு, தேரிப்பனை பகுதிகளில் அதிமுகவினா் பிரசாரம்

விக்கிரவாண்டி பகுதிகளில் திமுக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு
விடியோக்கள்

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

