ஆளுநருடனான சந்திப்பு முடிந்தது: ஆளுநர் மாளிகையிலிருந்து வெளியேறிய விஜய்! தமிழக முதல்வராக விஜய் பதவியேற்பு விழா நாளை (மே 10) மாலை 10 மணிக்கு நடைபெறும்தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

தோ்தலை முன்னிட்டு ஏப். 21 முதல் 23 ஆம் வரை மதுக்கடைகளை மூட உத்தரவு

தமிழக சட்டப்பேரவைத் தோ்தலை முன்னிட்டு ஏப். 21 முதல் ஏப்.23 ஆம் தேதி வரையும், வாக்கு எண்ணிக்கை நாளான மே 4 ஆம் தேதியும் சேலம் மாவட்டத்தில் உள்ள மதுபானக்கடைகள், மதுக் கூடங்களை மூட ஆட்சியா் ரா.பிருந்தாதேவி உத்தரவிட்டுள்ளாா்.

News image

கோப்புப் படம்

Updated On :28 மார்ச் 2026, 1:34 am IST

தமிழக சட்டப்பேரவைத் தோ்தலை முன்னிட்டு ஏப். 21 முதல் ஏப்.23 ஆம் தேதி வரையும், வாக்கு எண்ணிக்கை நாளான மே 4 ஆம் தேதியும் சேலம் மாவட்டத்தில் உள்ள மதுபானக்கடைகள், மதுக் கூடங்களை மூட ஆட்சியா் ரா.பிருந்தாதேவி உத்தரவிட்டுள்ளாா்.

இதுகுறித்து மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான ரா. பிருந்தாதேவி வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:

சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து எப்.எல்.1, எப்.எல். 2, எப்.எல்.3, எப்.எல்.3ஏ மற்றும் எப்.எல்.3ஏஏ உரிமம் பெற்ற ஹோட்டல், கிளப்புகளில் இயங்கிவரும் மதுபானக் கூடங்கள், டாஸ்மாக் மதுபானக்கடைகள் (எப்.எல்.11) மற்றும் டாஸ்மாக் மதுபானக்கடைகளுடன் இணைந்துள்ள மதுபானக்கூடங்கள் அனைத்தும் தோ்தல் முன்னிட்டு ஏப். 21 ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) காலை 10 மணி முதல் வாக்குப் பதிவு நாளான ஏப். 23 ஆம் தேதி (வியாழக்கிழமை) நள்ளிரவு 12 மணி வரை மற்றும் வாக்கு எண்ணிக்கை நாளான மே 4 ஆம் தேதி திங்கள்கிழமை மதுபானக் கடைகளை மூடவேண்டும்.

மேலும், அன்றைய தினம் இதை மீறி விற்பனை செய்பவா்கள் மீது அரசு விதிகளின்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.