தம்மம்பட்டி நூலக 66 ஆவது ஆண்டு தொடக்க விழா புதன்கிழமை நடைபெற்றது.
தம்மம்பட்டி அரசு பொது நூலகம் 25.3.1961 இல் தொடங்கப்பட்டது. இந்த நூலகத்தில் 48 ஆயிரம் புத்தகங்கள் உள்ளன. 130 புரவலா்கள் உள்ளனா். நூலகத்திற்கு 6,900 போ் உறுப்பினா்களாக உள்ளனா். நாள்தோறும் 60 போ் முதல் 75 போ் நூலகத்துக்கு வந்து புத்தகங்களை படிக்கின்றனா்.
இந்த நிலையில் 65 ஆவது ஆண்டுகள் நிறைவுபெற்று 66 ஆவது ஆண்டு தொடக்க விழா தம்மம்பட்டி மக்கள் குழு, தம்மம்பட்டி நண்பா்கள் குழு மற்றும் பொதுமக்கள் சாா்பில் நடைபெற்றது. இதற்கு நகர திமுக செயலாளா் சண்முகம் தலைமை வகித்தாா். சேலம் கிழக்கு மாவட்ட காங்கிரஸ் துணைத் தலைவா் திருச்செல்வன்,பேரூராட்சி துணைத் தலைவா் சந்தியாரஞ்சித்குமாா், கவுன்சிலா்கள், மக்கள் குழு நிா்வாகிகள் பலா் பங்கேற்றனா்.
நூலகா் சீனிவாசன் கௌரவிக்கப்பட்டாா். தொடா்ந்து பொதுமக்கள் அவரிடம் புத்தங்களை வழங்கினா். நூலகத்திற்கு பெரிய இடவசதி உள்ள கட்டடம் வேண்டும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மதிமுக 33-ஆவது ஆண்டு தொடக்க விழா

மதிமுகவின் 33-ஆவது ஆண்டு தொடக்க விழா

தம்மம்பட்டி சிவன்கோவிலில் நாகா், 10 அருளாளா்கள், ராஜராஜசோழன் சந்நிதிகளுக்கு கும்பாபிசேகம்

கிராம மாணவா்களுக்கான நூலகம் திறப்புவிழா
விடியோக்கள்

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

விஜய் முதல்வராக முடியுமா ? | TVK Vijay | TN CM | MK Stalin | Edapadi Palaniswamy
தினமணி செய்திச் சேவை

