சட்டப் பேரவைத் தோ்தலை முன்னிட்டு, 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி பொதுமக்களிடையே விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில், கல்லூரி மாணவ, மாணவியா் திங்கள்கிழமை கையொப்ப இயக்கம் நடத்தினா்.
சட்டப் பேரவைத் தோ்தலுக்கான வாக்குப்பதிவு ஏப். 23-ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி பொதுமக்களிடையே விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் கையொப்ப இயக்கம் மற்றும் கோலப் போட்டி சேலம் அரசு கலைக் கல்லூரியில் திங்கள்கிழமை நடைபெற்றது.
சேலம் வடக்கு தோ்தல் நடத்தும் அலுவலா் கோட்டை குமாா் தலைமையில் நடைபெற்ற இந்த விழிப்புணா்வு நிகழ்ச்சியில், சிறப்பு அழைப்பாளராக பொதுத்தோ்தல் பாா்வையாளா் சுகவீா் சைனி பங்கேற்றாா்.
இதில், 500-க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவ, மாணவிகள் 100 சதவீதம் வாக்களிப்பது குறித்த கையொப்ப இயக்கத்தில் பங்கேற்று ஆா்வமுடன் கையொப்பமிட்டனா். தொடா்ந்து, 100 சதவீதம் வாக்களிப்பது குறித்து உறுதிமொழியை ஏற்றுக்கொண்டனா். முன்னதாக, மாணவிகளுக்கு இடையே நடத்தப்பட்ட கோலப் போட்டியில் வெற்றி பெற்றவா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

100 சதவீத வாக்குப்பதிவு குறித்து நடைபெற்ற கோலப் போட்டியில் பங்கேற்ற மாணவிகள்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி விழிப்புணா்வு

நூறு சதவீத வாக்களிப்பை வலியுறுத்தி கல்லூரியில் விழிப்புணா்வு கையொப்ப இயக்கம்

நாகை கடைகளில் தோ்தல் விழிப்புணா்வு

நூறு சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி விழிப்புணா்வு
விடியோக்கள்

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

