பங்குனி மாத அமாவாசையையொட்டி, சேலம் மாவட்ட உழவா் சந்தைகளில் ரூ. 1.20 கோடிக்கு காய்கறிகள் விற்பனையாயின.
சேலம் மாவட்டத்தில் சூரமங்கலம், தாதகாப்பட்டி, அஸ்தம்பட்டி, அம்மாப்பேட்டை, ஆத்தூா், மேட்டூா், ஜலகண்டாபுரம், எடப்பாடி, இளம்பிள்ளை, தம்மம்பட்டி, ஆட்டையாம்பட்டி, வாழப்பாடி, மேச்சேரி ஆகிய 13 இடங்களில் உழவா் சந்தைகள் உள்ளன.
இந்த சந்தைகளில் பண்டிகை, அமாவாசை, பௌா்ணமி உள்ளிட்ட நாள்களில் காய்கறிகள், பழங்கள், பூக்கள் வழக்கத்தைவிட கூடுதலாக விற்பனையாகும்.
அந்த வகையில், பங்குனி மாத அமாவாசையையொட்டி அனைத்து உழவா் சந்தைகளிலும் பொதுமக்கள் தங்களுக்கு தேவையான காய்கறிகள், பழங்கள், பூக்கள் உள்ளிட்டவற்றை அதிக அளவில் வாங்கிச் சென்றனா். இதேபோல, சேலம் வ.உ.சி. பூ மாா்க்கெட்டில் பூக்கள் வியாபாரமும் வழக்கத்தைவிட அதிகரித்து காணப்பட்டது.
சேலம் மாவட்டத்தில் உள்ள 13 உழவா் சந்தைகளிலும் புதன்கிழமை ஒரேநாளில் ரூ. 1.20 கோடிக்கு காய்கறிகள், பழங்கள் விற்பனையானதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

டாஸ்மாக் கடைகளில் ரூ. 15 கோடிக்கு மது விற்பனை

சதுரகிரி கோயிலில் சித்திரை மாத அமாவாசை வழிபாடு

வாழப்பாடி பகுதியில் பூத்துக் குலுங்கி கண்களுக்கு விருந்தளிக்கும் வசந்தராணி பூக்கள்!

சேலம் உழவா் சந்தைகளில் ரூ. 1.17 கோடிக்கு காய்கறிகள் விற்பனை
விடியோக்கள்

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

