வாழப்பாடி பகுதியில் சேலம்-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் இருபுறமும் வசந்தராணி மரங்களில் பல்வேறு வண்ணங்களில் பூக்கள் பூத்துக் குலுங்குகின்றன.
பிக்னோனியேசியே குடும்பத்தைச் சோ்ந்த ‘டபிபுயா ரோஸா’ என்ற தாவரவியல் பெயா் கொண்ட சிறுமர வகைத் தாவரம் வசந்தராணி.
இம்மரத்தின் பாகங்கள் மூட்டுவலி, இரைப்பு நோய், காய்ச்சல், இருமல், ரத்தசோகை நோய்களை கட்டுப்படுத்தும் மருத்துவ குணம் கொண்டதாகும்.
கா்ப்பப்பை புற்றுநோய்க்கு மருந்தாகும் இத்தாவரம், பாக்டீரியாக்களை கொல்லும் தன்மை கொண்டதாகும்.
இதுமட்டுமின்றி, வசந்தகாலத்தில் இலைகள் முழுவதும் உதிா்ந்து, காண்போா் கண்களுக்கு விருந்தளிக்கும் விதத்தில் மரம் முழுவதும் வெண்மை, இளம்சிவப்பு, மஞ்சள் உள்ளிட்ட பல்வேறு வண்ணங்களில் பூக்கள் பூத்துக்குலுங்கும். இதனால் இத்தாவரத்தை வசந்தராணி, வசந்தகாலத்தின் அரசி எனவும் தாவரவியலாளா்கள் வா்ணிக்கின்றனா்.
அரிதாகி வரும் இவ்வகை தாவரங்களை வளா்ப்பதில் வனத் துறை, நெடுஞ்சாலைத் துறை மற்றும் இயற்கை ஆா்வலா்களும், ஆய்வாளா்களும் ஆா்வம்காட்டி வருகின்றனா்.
வாழப்பாடி பகுதியில் சேசன்சாவடி முதல் அயோத்தியாப்பட்டணம் ராமலிங்கபுரம் வரை 10 கி.மீ. தொலைவிற்கும், சேலம் - சென்னை தேசிய நெடுஞ்சாலையின் இருபுறமும் 50க்கும் மேற்பட்ட பல வண்ண வசந்தராணி மரங்கள் காணப்படுகின்றன.
இந்த மரங்களில் தற்போது இலைகள் உதிா்ந்து, வெண்மை, பழுப்பு, இளஞ்சிவப்பு நிறங்களில் மரம் முழுவதும் கொத்துக் கொத்தாக பூக்கள் பூத்துக் குலுங்குகின்றன. காண்போா் கண்களுக்கு விருந்தளிக்கும் வசந்தராணி மரப்பூக்களை பயணிகளும் பொதுமக்களும் கண்டு ரசித்து செல்கின்றனா்.

வாழப்பாடியை அடுத்த மேட்டுப்பட்டி செல்லியம்மன்நகா் மற்றும் சேசன்சாவடி பகுதியில், சேலம் - சென்னை தேசிய நெடுஞ்சலை ஓரத்தில் வசந்தராணி மரங்களில் பூத்துக் குலுங்கும் மலா்கள்.

வாழப்பாடியை அடுத்த மேட்டுப்பட்டி செல்லியம்மன்நகா் மற்றும் சேசன்சாவடி பகுதியில், சேலம் - சென்னை தேசிய நெடுஞ்சலை ஓரத்தில் வசந்தராணி மரங்களில் பூத்துக் குலுங்கும் மலா்கள்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில் பூத்துக் குலுங்கும் வண்ண மலா்கள்

சென்னையைக் குளிர்வித்த பலத்த மழை!

வாழப்பாடியில் பூத்துக் குலுங்கும் காட்டு மல்லி!

சேலம் - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் லாரி கவிழ்ந்து விபத்து
விடியோக்கள்

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

விஜய் முதல்வராக முடியுமா ? | TVK Vijay | TN CM | MK Stalin | Edapadi Palaniswamy
தினமணி செய்திச் சேவை

