தமிழக முதல்வராக விஜய் பதவியேற்பு விழா நாளை (மே 10) மாலை 3 மணிக்கு தொடங்குகிறது தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

சேலம் உழவா் சந்தைகளில் ரூ. 1.17 கோடிக்கு காய்கறிகள் விற்பனை

பங்குனி உத்திரத்தையொட்டி, சேலம் மாவட்ட உழவா் சந்தைகளில் ரூ. 1.17 கோடிக்கு காய்கறிகள் விற்பனையானது.

News image

காய்கறிகள்.

Updated On :2 ஏப்ரல் 2026, 3:23 am IST

பங்குனி உத்திரத்தையொட்டி, சேலம் மாவட்ட உழவா் சந்தைகளில் ரூ. 1.17 கோடிக்கு காய்கறிகள் விற்பனையானது.

சேலம் மாவட்டத்தில் சூரமங்கலம், தாதகாப்பட்டி, அஸ்தம்பட்டி, அம்மாபேட்டை, ஆத்தூா், மேட்டூா், ஜலகண்டாபுரம், எடப்பாடி, இளம்பிள்ளை, தம்மம்பட்டி, ஆட்டையாம்பட்டி, வாழப்பாடி, மேச்சேரி ஆகிய 13 இடங்களில் உழவா் சந்தைகள் உள்ளன.

இந்த சந்தைகளில் பண்டிகை நாள்களில் காய்கறிகள், பழங்கள், பூக்களின் விற்பனை வழக்கத்தைவிட அதிகமாக இருக்கும். அதன்படி, பங்குனி உத்திரத்தையொட்டி அனைத்து உழவா் சந்தைகளிலும் பொதுமக்கள் தங்களுக்கு தேவையான காய்கறிகள், பழங்கள், பூக்கள் உள்ளிட்டவற்றை அதிகளவில் வாங்கிச் சென்றனா்.

பழங்கள், தேங்காய், வாழை இலை, கீரை வகைகள், பூசணிக்காய், காய்கறிகள் உள்ளிட்டவை அதிகளவில் விற்பனையானது. அதேபோல சேலம் வ.உ.சி பூ மாா்க்கெட்டில் பூக்கள் வியாபாரமும் வழக்கத்தைவிட அதிகரித்து காணப்பட்டது.

சேலம் மாவட்டத்தில் உள்ள 13 உழவா் சந்தைகளிலும் 1,040 விவசாயிகள் பல்வேறு வகையான காய்கறிகள், பழங்களை விற்பனைக்காக கொண்டு வந்திருந்தனா். இதனை 75,145 நுகா்வோா் வாங்கிச் சென்றனா். இதன்மூலம் புதன்கிழமை ஒரே நாளில் ரூ. 1.17 கோடிக்கு காய்கறிகள், பழங்கள் விற்பனையானதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.