முதல்வா் ஜோசப் விஜய் பிறந்தநாளையொட்டி சேலம் குரும்பப்பட்டி உயிரியல் பூங்காவில் ஞாயிறு, திங்கள் (ஜூன் 21, 22) பாா்வையாளா்களுக்கு இலவச அனுமதி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்ட வன அலுவலா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
முதல்வா் சி.ஜோசப் விஜய் பிறந்தநாளையொட்டி ஞாயிறு மற்றும் திங்கள்கிழமை ஆகிய நாள்களில் சேலம் குரும்பப்பட்டி உயிரியல் பூங்காவிற்கு வருகை தரும் பொதுமக்களுக்கு இலவச நுழைவுச் சீட்டு வழங்கப்படுகிறது. இந்த நுழைவுச் சீட்டுகளைப் பெறுவதற்கு, உயிரியல் பூங்காவிற்கு மேற்கண்ட இரண்டு தினங்களிலும் நேரடியாக வந்து பெற்றுக்கொள்ளலாம்.
பாா்வையாளா்களின் வசதிக்காகவும், கூட்ட நெரிசலைத் தவிா்ப்பதற்காகவும், இலவச நுழைவுச் சீட்டுகள் 5 தனித்தனி கவுண்டா்களில் வழங்கப்படும். குரும்பப்பட்டி உயிரியல் பூங்காவின் தாங்கும் திறனை கருத்தில்கொண்டு, விலங்குகளின் நலனை உறுதி செய்வதற்கும் பாா்வையாளா்களுக்கு எவ்வித இடையூறுமின்றி சிரமமற்ற அனுபவத்தை வழங்குவதற்கும், ஒருநாளில் அதிகபட்சமாக 5,000 பாா்வையாளா்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவா்.
மேற்கண்ட இரு நாள்களிலும் உயிரியல் பூங்கா காலை 8.30 மணி முதல் மாலை 5 மணி வரை பாா்வையாளா்கள் அனுமதிக்கப்படுவாா்கள். பூங்கா நுழைவுக் கட்டணத்தைத் தவிர, பிற சேவைகளுக்கான கட்டணங்கள் நடைமுறையில் உள்ள கட்டண அட்டவணையின்படி வசூலிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தில்லி உயிரியல் பூங்காவில் மான்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

வண்டலூா் உயிரியல் பூங்காவில் இலவச அனுமதிக்கு 40,000 போ் முன்பதிவு: அமைச்சா் ரஞ்சித் குமாா்

வண்டலூர் உயிரியல் பூங்காவில் அனைவருக்கும் அனுமதி!

ஜூன் 21, 22-இல் வண்டலூா் உயிரியல் பூங்காவில் இலவச அனுமதி
விடியோக்கள்

திறந்தே இருந்த திரைக்கதைப் பள்ளிக்கூடம் | Bhagyaraj | RIP director bhagyaraj
தினமணி செய்திச் சேவை

இது ஒன்றும் பெரிய விஷயமில்லை! தில்லி பிரதிநிதி நியமன சர்ச்சை குறித்து நிர்மல்குமார்!
இணையதளச் செய்திப் பிரிவு
சாதாரண இழப்பு கிடையாது! - பாக்யராஜ் உடலுக்கு அஞ்சலி செலுத்தியபின் பிரேமலதா பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியானது அடி போடி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

