ரூ. 100 கோடி மோசடி: தனியார் பள்ளிகள் சங்கத் தலைவர் பி.டி. அரசகுமார் கைது!தமிழக காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூருக்கு முதல்வர் விஜய் வாழ்த்து! இயக்குநர் பாக்யராஜுக்கு நாளை காலை இறுதிச் சடங்கு!கே. பாக்யராஜ் உடலுக்கு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி நேரில் அஞ்சலி! தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவராக மாணிக்கம் தாகூர் நியமனம்!கே. பாக்யராஜுக்கு முதல்வர் விஜய் அஞ்சலி! சாந்தனுவை ஆரத்தழுவி ஆறுதல்!!திமுக கூட்டணியிலிருந்து மதிமுக விலகல்!
/

வண்டலூர் உயிரியல் பூங்காவில் அனைவருக்கும் அனுமதி!

வண்டலூர் உயிரியல் பூங்காவில் அனைவருக்கும் அனுமதி வழங்கப்பட்டிருப்பது தொடர்பாக....

News image
Updated On :21 ஜூன் 2026, 2:23 pm IST

வண்டலூர் உயிரியல் பூங்காவுக்கு வந்த அனைவருக்கும் உள்ளே செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

முதல்வர் ஜோசப் விஜய்யின் பிறந்த நாளையொட்டி, அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவுக்குச் செல்ல ஞாயிறு, திங்கள் (ஜூன் 21, 22) ஆகிய இரு நாள்கள் இலவச நுழைவு அறிவிக்கப்பட்டிருந்தது.

இதற்கு இணையதளம் மூலம் நுழைவுச் சீட்டை முன்பதிவு செய்வது கட்டாயம். அதிக எண்ணிக்கையில் பார்வையாளர்கள் வர வாய்ப்புள்ளதால், நாளொன்றுக்கு 20,000 பார்வையாளர்கள் என்ற வரம்பு நிர்ணயிக்கப்பட்ட நிலையில், இரு நாள்களுக்கான அனைத்து இணையதள முன்பதிவு நுழைவுச் சீட்டுகளும் முழுமையாகப் பதிவு செய்யப்பட்டன.

இதனிடையே, இன்று அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவுக்குச் சென்ற மக்கள், இலவச அனுமதிக்காக வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில், அமைச்சர் ரஞ்சித் குமார் ஆய்வு மேற்கொண்ட பிறகு, வண்டலூர் உயிரியல் பூங்காவுக்கு வந்த அனைவரையும் அனுமதிக்க உத்தரவிட்டார்.

பூங்காவுக்கு வரும் பார்வையாளர்களின் வசதிக்காக பூங்கா வளாகத்துக்குள் தனி வாகன நிறுத்துமிடமும், கனரக மற்றும் பிற வாகனங்களுக்கு பூங்காவின் கூடுதல் வாகன நிறுத்துமிடமும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

Summary

Everyone who arrived at the Vandalur Zoological Park has been granted permission to enter.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.