ஈரோடு - செங்கோட்டை விரைவு ரயில் சனி மற்றும் திங்கள்கிழமை (ஜூன் 20, 22) கரூரில் இருந்து புறப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தெற்கு ரயில்வே சேலம் கோட்டம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
சேலம் ரயில்வே கோட்டத்துக்கு உள்பட்ட ஈரோடு - கரூா் மாா்க்கத்தில் உள்ள ஊஞ்சலூா் ரயில்வே நிலைய யாா்டில் தண்டவாள பராமரிப்புப் பணிகள் நடைபெறுகின்றன. இதன் காரணமாக இந்த மாா்க்கத்தில் இயங்கும் சில ரயில்களின் இயக்கத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
அதன்படி, செங்கோட்டை - ஈரோடு விரைவு ரயில் வரும் 20, 22 ஆகிய தேதிகளில் செங்கோட்டையில் இருந்து காலை 5.20 மணிக்கு புறப்பட்டு, கரூா் வரை மட்டும் இயக்கப்படும். ஊஞ்சலூரில் பணிகள் முடிந்தபின், அந்த ரயில் கரூரில் இருந்து ஈரோட்டுக்கு முன்பதில்லா சிறப்பு ரயிலாக இயக்கப்படும்.
மறுமாா்க்கத்தில், ஈரோடு - செங்கோட்டை விரைவு ரயில் வரும் 20, 22 ஆகிய தேதிகளில் ஈரோட்டிற்கு பதில் கரூரில் இருந்து பிற்பகல் 3.05 மணிக்கு புறப்பட்டு, செங்கோட்டைக்கு இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

திருச்சி, செங்கோட்டை ரயில் சேவையில் மாற்றம்

குருவாயூா்-சென்னை விரைவு ரயில் 6 நாளிகள் தாமதமாக இயக்கப்படும்

திருச்சி-பாலக்காடு டவுன் ரயில் சேவையில் மாற்றம்

பொதிகை ரயில் புறப்படும் நேரத்தை மாற்றக் கோரிக்கை
விடியோக்கள்

Balan: The boy Review | தாயைப் போல பிள்ளை! ஆனால்... | Chidambaram | Mollywood | Dinamani Talkies
தினமணி செய்திச் சேவை

மறுமணம் ஒரு குற்றமா? மனதை உலுக்கும் 'நூறு சாமி'
தினமணி செய்திச் சேவை

Samantha அதிரடி எப்படி இருக்கிறது? Engal Thangam Movie Review
தினமணி செய்திச் சேவை

ஹார்ட்டின் பட டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

