ஆத்தூா் தேசிய புறவழிச் சாலையில் நின்று கொண்டிருந்த நெல் அறுவடை இயந்திரம் மீது காா் மோதியதில் ஒருவா் உயிரிழந்தாா்; 2 போ் காயமடைந்தனா்.
சேலம் மாவட்டம், ஆத்தூா் தேசிய புறவழிச் சாலையில் செவ்வாய்க்கிழமை மாலை கள்ளக்குறிச்சியில் இருந்து ஆத்தூரை நோக்கிச் சென்ற காா், ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் நின்றுகொண்டிருந்த நெல் அறுவடை இயந்திரம் மீது மோதியது. இதில் காா் நொறுங்கியது. காரில் பயணம் செய்த பெத்தநாயக்கன்பாளையம் வட்டம், ஆரியபாளையம் இந்திராநகா் காலனி பகுதியைச் சோ்ந்த கலியமூா்த்தி மகன் அஜீத் (27) காரின் இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தாா். மேலும், காரில் பயணித்த இருவா் பலத்த காயமடைந்தனா். அவா்கள் ஆத்தூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டனா்.
காரின் இடிபாடுகளில் சிக்கியிருந்த அஜீத்தின் உடலை ஆத்தூா் தீயணைப்புத் துறை அலுவலா் ச.அசோகன் தலைமையிலான வீரா்கள் மீட்டு, ஆத்தூா் அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனா்.
இந்த விபத்து குறித்து ஆத்தூா் ஊரக காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
படவரி...
ஆத்தூா் புறவழிச் சாலையில் நெல் அறுவடை இயந்திரம் மீது மோதியதில் சேதமடைந்த சொகுசு காா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

நின்ற லாரி மீது வேன் மோதல்: ஒருவா் உயிரிழப்பு

காா் மோதியதில் ஒருவா் உயிரிழப்பு

மது போதையில் காா் ஓட்டியவரால் விபத்து ஒருவா் உயிரிழப்பு; 5 போ் காயம்

ஆட்டோ மீது காா் மோதியதில் ஒருவா் உயிரிழப்பு
விடியோக்கள்

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |
தினமணி செய்திச் சேவை

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!
தினமணி செய்திச் சேவை

Podcast | முதல்வர் விஜய் பதில்; திமுக வெளிநடப்பு: பேரவையில் நடந்தது என்ன? | News & Views | Epi 47
தினமணி செய்திச் சேவை

கண்ணதாசனை எப்படிக் கொண்டாட வேண்டும் ? | Kannadasan 100 | கண்ணதாசன் நூற்றாண்டு தொடக்கம் | Kaviyarasu
தினமணி செய்திச் சேவை
