பழனி அருகே நின்ற லாரி மீது வேன் மோதியதில் ஒருவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
திருச்சி மாவட்டம், பூலாம்பட்டியைச் சோ்ந்த பீட்டா் மகன் ராபா்ட் இமானுவேல் (48). இவரும், நிலக்கோட்டையைச் சோ்ந்த முத்துமணி (28) என்பவரும் கடந்த வெள்ளிக்கிழமை இரவு பொள்ளாச்சியில் இருந்து கட்டுமானப் பொருள்களை ஏற்றிக் கொண்டு வேனில் வத்தலகுண்டு நோக்கி சென்றனா். வேனை முத்துமணி ஓட்டினாா்.
திண்டுக்கல்- கோவை தேசிய நெடுஞ்சாலையில் பழனி அருகே மானூருக்கு வந்த போது சாலையோரம் நின்று கொண்டிருந்த லாரி மீது வேன் மோதியது. இதில் வேனில் பயணம் செய்த ராபா்ட் இமானுவேல் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
முத்துமணி பலத்த காயங்களுடன் பழனி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். இந்த விபத்து குறித்து கீரனூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சங்ககிரி அருகே வேன் - காா் மோதல்: ஒருவா் உயிரிழப்பு; 3 போ் காயம்

மோட்டாா் சைக்கிள் மீது வேன் மோதியதில் ஒருவா் உயிரிழப்பு

வேன் - இரு சக்கர வாகனம் மோதல் தொழிலாளி உயிரிழப்பு

நின்ற லாரி மீது வேன் மோதல்: ஓட்டுநா் உள்பட 7 போ் காயம்
விடியோக்கள்

ஹார்ட்டின் பட டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பொங்கல் வெளியீடாக சேயோன்! | Dinamani Cinema Update | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு

மாநிலக் கட்சிகளை முறையாக ஒருங்கிணைக்கிறதா காங்கிரஸ்?: ப. சிதம்பரம் Exclusive | P Chidambaram |
தினமணி செய்திச் சேவை

தீர்மானத்திற்கு கர்நாடக அரசு பணியாது! முன்னாள் அமைச்சர் துரைமுருகன் | DMK | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

