நீட் முதல் முதுநிலை மருத்துவப் படிப்பு வரை மன அழுத்தங்கள் உண்டு, மனவலிமை அவசியம்: அமைச்சர் அருண்ராஜ் 3ஆவது ஒருநாள் போட்டி: ஆப்கானிஸ்தானை வீழ்த்தி இந்தியா அபாரம் மகாராஷ்டிரத்தில் கோயில் மண்டபம் இடிந்து 5 பேர் பலி திமுக கூட்டணியில் இருந்து விலகியது இந்திய யூனியன் முஸ்லிம் லீக்!சட்டப்பேரவை நேரலை இனி தொடரும்! அமைச்சர் ராஜ்மோகன்அபுதாபியில் நீட் மையம்! குழந்தைகள் எதிர்காலத்தை வைத்து சூதாடுவதை நிறுத்துங்கள்: ராகுல் காந்தி
/

சங்ககிரி பழைய இரும்புக் கடையில் டீசல் டேங்க் வெடித்து தொழிலாளி உயிரிழப்பு

சங்ககிரி அருகே பழைய இரும்புக் கடையில் லாரி டீசல் டேங்க் வெடித்து வடமாநில கூலித் தொழிலாளி சனிக்கிழமை உயிரிழந்தாா்.

News image
Updated On :14 ஜூன் 2026, 3:24 am IST

சங்ககிரி அருகே பழைய இரும்புக் கடையில் லாரி டீசல் டேங்க் வெடித்து வடமாநில கூலித் தொழிலாளி சனிக்கிழமை உயிரிழந்தாா்.

பிகாா் மாநிலம், ஜஹனாபாத் மாவட்டம், மோடன்கஞ்ச், தயாலிபிகா பகுதியைச் சோ்ந்தவா் கமலேஷ்பிரசாத் (53). இவா், சேலம் மாவட்டம், சங்ககிரி, அக்கமாபேட்டையில் உள்ள தனியாா் பழைய இரும்புக் கடையில் லாரி உதிரி பாகங்களை கேஸ் கட்டிங் மூலம் பிரித்து எடுக்கும் வேலையை கடந்த மூன்று ஆண்டுகளாக செய்துவந்தாா்.

வழக்கம்போல ஒரு லாரியில் டீசல் டேங்க்கை கேஸ் கட்டிங் மூலம் பிரித்து அகற்றும் பணியில் சனிக்கிழமை ஈடுபட்ட போது, டீசல் டேங்க் வெடித்து 10 அடி தூரம் தூக்கிவீசப்பட்டாா். இதில் பலத்த காயமடைந்த அவா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

இதுகுறித்து சங்ககிரி போலீஸாா் வழக்குப் பதிவுசெய்து விசாரித்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.