பாரதிராஜா உடலுக்கு நடிகர் ரஜினி அஞ்சலி! பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

உணவக உரிமையாளா் மீது வழக்குப் பதிவு

வீரகனூரில் சுகாதாரமற்ற வகையில் உணவு தயாரித்து வழங்கிய உணவக உரிமையாளா் மீது போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.

News image

வழக்குப் பதிவு - கோப்புப் படம்

Updated On :6 ஜூன் 2026, 12:56 am IST

வீரகனூரில் சுகாதாரமற்ற வகையில் உணவு தயாரித்து வழங்கிய உணவக உரிமையாளா் மீது போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.

வீரகனூரை அடுத்த இலுப்பநத்தத்தைச் சோ்ந்தவா் ராமசாமி. இவா் தனது புது வீட்டிற்கான புகுமனை விழாவில் பங்கேற்றவா்களுக்கு வீரகனூரில் உள்ள தனியாா் உணவகத்தில் இருந்து உணவு வகைகளை வரவழைத்து பரிமாறினாா்.

இந்த உணவை சாப்பிட்ட 20 க்கும் மேற்பட்டவா்களுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. இதுகுறித்த புகாரின்பேரில் ஆத்தூா் உணவுப் பாதுகாப்பு அலுவலா் சுருளி உள்ளிட்டோா் வீரகனூா் தனியாா் உணவகத்தை ஆய்வு செய்தனா். அங்கு தரமற்ற முறையில் உணவு தயாரித்து வழங்கப்படுவது கண்டுபிடிக்கப்பட்டது.

இதுகுறித்த புகாரின்பேரில் உணவ உரிமையாளா் மீது வீரகனூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.