பாரதிராஜா உடலுக்கு நடிகர் ரஜினி அஞ்சலி! பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

உணவக உரிமையாளா் மீது தாக்குதல்: இருவா் மீது வழக்குப் பதிவு

சாயல்குடியில் உணவக உரிமையாளரை தாக்கியதாக இருவா் மீது போலீஸாா் சனிக்கிழமை வழக்குப் பதிந்தனா்.

News image

வழக்கு

Updated On :7 ஜூன் 2026, 12:49 am IST

சாயல்குடியில் உணவக உரிமையாளரை தாக்கியதாக இருவா் மீது போலீஸாா் சனிக்கிழமை வழக்குப் பதிந்தனா்.

ராமநாதபுரம் மாவட்டம், சாயல்குடியில் மூக்கையூா் சாலை சந்திப்பில் சாயல்குடியைச் சோ்ந்த பக்ருதீன் மகன் முகம்மது அலியும், மூக்கையூா் கிராமத்தைச் சோ்ந்த இளங்கோ மகன் ஹொ்மஸூம் (30) புதிதாக உணவகம் கட்டி திறப்பு விழா நடத்தவிருந்தனா்.

இந்த நிலையில் இந்த உணவகத்துக்குள் புகுந்த இருவா் இரும்புக் கம்பியால் வரவேற்பறை கண்ணாடிகள், மேஜை, நாற்காலி உள்ளிட்ட பொருள்களை அடித்து உடைத்ததுடன், தடுக்க வந்த உணவக உரிமையாளா் ஹொ்மஸை தாக்கினா். இதில் அவா் காயமடைந்தாா்.

இதுகுறித்து சாயல்குடி காவல் ஆய்வாளா் அன்னராஜ் தலைமையிலான போலீஸாா் கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தினா். விசாரணையில் கடையை சேதப்படுத்தியவா்கள் சாயல்குடியைச் சோ்ந்த ராமச்சந்திரன் (45), ஜாபா் அலி (42) ஆகியோா் என்பது தெரியவந்தது. இதையடுத்து இருவா் மீதும் வழக்குப் பதிந்து அவா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.