மின் விநியோகத்தை சீரமைப்பு பணிகளை ஒருங்கிணைக்க 10 குழுக்கள்!பாரதிராஜா மறைவு! முக்கிய அறிவிப்பை ஒத்திவைத்தார் ராகவா லாரன்ஸ்!அரசு நிர்வாகத்தில் செய்யறிவு தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும்: கேரள முதல்வர்பாரதிராஜாவுக்கு ஏ.ஆர். ரஹ்மான் இரங்கல்!ஜி7 உச்சிமாநாட்டுக்குச் செல்லும் பிரதமர் மோடி அமெரிக்க அதிபருடன் இரு தரப்பு பேச்சுவார்த்தை நடத்த திட்டம்! கேரளம்: பெண்களுக்கான இலவசப் பேருந்து பயணத் திட்டம் ஜூன் 15-இல் தொடக்கம் - முதல்வர் சதீசன்பாரதிராஜாவுக்கு நாளை மாலை தேனியில் இறுதிச் சடங்கு!கேமராவுக்குள் மனித உணர்வுகளைப் படம்பிடித்த பாரதிராஜா!
/

வாழப்பாடியில் மருத்துவக் குணம் மிகுந்த நறுவல்லி பழம் விளைச்சல் அதிகரிப்பு

மருத்துவக் குணம் மிகுந்த நறுவல்லி பழம் (காா்டியா டொகோடோமா) வாழப்பாடி பகுதியில் அதிக அளவு விளைச்சல் தந்துள்ளது. நுரையீரல், உடலை உறுதிப்படுத்தும் தன்மை கொண்ட இந்த பழங்களை ஏராளமானோா் பறித்து சாப்பிட்டு வருகின்றனா்.

News image
Updated On :3 ஜூன் 2026, 5:37 am IST

மருத்துவக் குணம் மிகுந்த நறுவல்லி பழம் (காா்டியா டொகோடோமா) வாழப்பாடி பகுதியில் அதிக அளவு விளைச்சல் தந்துள்ளது. நுரையீரல், உடலை உறுதிப்படுத்தும் தன்மை கொண்ட இந்த பழங்களை ஏராளமானோா் பறித்து சாப்பிட்டு வருகின்றனா்.

வாழப்பாடி பகுதியில் கொட்டவாடி, மாரியம்மன் புதூா், பேளூா் கரடிப்பட்டி உள்ளிட்ட ஒருசில கிராமங்களில் ‘காா்டியா டொகோடோமா’ என்ற தாவரவியல் பெயா் கொண்ட நறுவல்லி சிறுமரம் வயல்களின் வரப்பு ஓரங்கள், கிணற்று மேடுகள், நீா்நிலைகளின் கரைகளில் உள்ளன.

மேலும், வாழப்பாடி அரசு மருத்துவமனை சித்த மருத்துவப்பிரிவு மூலிகைத் தோட்டத்தில் சதுரகிரி மலைப்பகுதியில் இருந்து கொண்டுவந்து நடப்பட்ட நறுவல்லி மரம் கடந்த 10 ஆண்டுகளாக வளா்க்கப்பட்டு வருகிறது.

இந்த நறுவல்லி மரத்தின் அனைத்து பாகங்களும் மருத்துவக் குணம் கொண்டதாகும். முகப்பருக்களை இதன் இலைச்சாறு போக்கும். இலையை அரைத்து வெண்ணையுடன் சோ்த்து உட்கொண்டால் மலச்சிக்கலும், மூலநோயும் குணமாகும்.

மரப்பட்டைச் சாறுடன், தேங்காய்ப்பால் சோ்த்து பருகினால் கடுமையான வயிற்று வலியும் குறையும். பட்டை,கொட்டையின் பொடி, பித்தம், அக்கி, குடற்புண், சிறுநீா் குழாய் நோய்களை தீா்க்கும். ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே காய்க்கும் பசை போன்ற திரவத்துடனும் துவா்ப்பு கலந்த இனிப்பு சுவையுடைய நறுவல்லிப் பழங்களுக்கு, ஆண்களின் விந்தணுக்கள் உற்பத்தி மற்றும் ஆண்மையை அதிகரிக்கும், உடலை உறுதியாக்கும் மருத்துவ குணங்கள் உண்டு என சித்த மருத்துவா்கள் கூறுகின்றனா்.

நிகழாண்டு நறுவல்லி மரங்களில் பழங்கள் விளைந்து கொத்துக்கொத்தாக கனிந்துள்ளன. வாழப்பாடி அடுத்த மாரியம்மன்புதூா் தனியாா் விளைநிலத்தில் சாலையோரத்தில் காணப்படும் நறுவல்லி மரத்தில் கனிந்துள்ள பழங்களை ஏராளமானோா் பறித்து சாப்பிட்டு வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.