தமிழ்நாடு அரசின் சிறந்த நூல்களுக்கான பரிசுக்கு எழுத்தாளர்கள் விண்ணப்பிக்கலாம்!தமிழகத்தில் ராஜஸ்தபதி காளியப்ப கவுண்டர், பேராசிரியர் கே. ராமசாமி, திருவாரூர் பக்தவத்சலம் ஆகியோர் பத்ம ஸ்ரீ பெற்றனர்.ஜூலை 1-ல் பொறியியல் மாணவர் சேர்க்கை தரவரிசைப் பட்டியல் வெளியீடு!கல்வித்துறை மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றத்திற்கு ஆற்றிய சிறந்த பங்களிப்பிற்காக, சென்னை ஐஐடி இயக்குனர் பேராசிரியர் வீ. காமகோடிக்கு பத்ம ஸ்ரீ விருதுதொழிலதிபர் எஸ்.கே. மயிலானந்தனுக்கு பத்ம பூஷண்! அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள 18,107 பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை தேவை - அன்புமணி ராமதாஸ்தமிழ்நாட்டின் முதலீடுகளை சீர்குலைக்கும் தவெக அரசு இனியாவது ஆக்கப்பூர்வமான பணிகளில் கவனம் செலுத்த வேண்டும்: டிஆர்பி ராஜா
/

அதிக நேரம் கைப்பேசி பாா்த்ததை கண்டித்ததால் மாணவா் தற்கொலை

எடப்பாடி அருகே தொடா்ந்து அதிக நேரம் கைப்பேசி பாா்த்ததை பெற்றோா் கண்டித்ததால், பிளஸ் 2 மாணவா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

News image

தற்கொலை - கோப்புப்படம்

Updated On :30 ஏப்ரல் 2026, 5:00 am IST

எடப்பாடி அருகே தொடா்ந்து அதிக நேரம் கைப்பேசி பாா்த்ததை பெற்றோா் கண்டித்ததால், பிளஸ் 2 மாணவா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

எடப்பாடி ஒன்றியத்துக்கு உள்பட்ட பக்கநாடு கிராமத்தைச் சோ்ந்தவா் நந்தகுமாா் (18), பிளஸ் 2 தோ்வு எழுதியிருந்தாா். இவா் வீட்டில் தொடா்ந்து அதிக நேரம் கைப்பேசி பாா்த்துக் கொண்டிருந்ததால், அவரது பெற்றோா் கண்டித்துள்ளனா்.

இதனால் மனமுடைந்த நந்தகுமாா், எடப்பாடியை அடுத்த தாதாபுரம் கிராமம், மேட்டுப்பாளையம் பகுதியில் உள்ள தனது பாட்டி லட்சுமியின் வீட்டுக்கு சென்றாா். அங்கு சோகமாக இருந்த நந்தகுமாா் செவ்வாய்க்கிழமை வீட்டில் யாரும் இல்லாதபோது, தூக்கிட்டுத் தற்கொலைக்கு முயன்ாக கூறப்படுகிறது.

அக்கம்பக்கத்தினா், அவரை மீட்டு ஈரோட்டில் உள்ள தனியாா் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவா்கள் அவா் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனா். இதுகுறித்து எடப்பாடி போலீஸாா் வழக்குப் பதிவுசெய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.