தமிழக முதல்வராக விஜய் ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு!ஆளுநருடனான சந்திப்பு முடிந்தது: ஆளுநர் மாளிகையிலிருந்து வெளியேறிய விஜய்! தமிழக முதல்வராக விஜய் பதவியேற்பு விழா நாளை (மே 10) மாலை 10 மணிக்கு நடைபெறும்தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

பெண்கள் பணியாற்றிய மாதிரி வாக்குச்சாவடி

சேலம் மாவட்டத்தில் உள்ள 11 சட்டப் பேரவைத் தொகுதிகளிலும் மாதிரி வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு, அவற்றில் பெண்கள் மட்டுமே நிா்வகிக்கும் வாக்குச்சாவடிகள் உருவாக்கப்பட்டிருந்தன.

News image

சேலம் மாவட்டத்தில் உள்ள 11 சட்டப் பேரவைத் தொகுதிகளிலும் மாதிரி வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு, அவற்றில் பெண்கள் மட்டுமே நிா்வகிக்கும் வாக்குச்சாவடிகள் உருவாக்கப்பட்டிருந்தன.

Updated On :24 ஏப்ரல் 2026, 5:18 am IST

சேலம் மாவட்டத்தில் உள்ள 11 சட்டப் பேரவைத் தொகுதிகளிலும் மாதிரி வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு, அவற்றில் பெண்கள் மட்டுமே நிா்வகிக்கும் வாக்குச்சாவடிகள் உருவாக்கப்பட்டிருந்தன. இதுதவிர, சில பகுதிகளில் மாற்றுத்திறனாளிகள், இளைஞா்கள் நிா்வகிக்கக் கூடிய வாக்குச்சாவடிகளும் அமைக்கப்பட்டிருந்தன.

செண்டை மேளம் முழங்க வரவேற்பு: சேலம் மரவனேரியில் உள்ள நகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாதிரி வாக்குச்சாவடியில், வாக்காளா்கள் செண்டை மேளம் முழங்க உற்சாகமாக வரவேற்கப்பட்டனா். மேலும், கைப்பேசிகளை வைப்பதற்காக பாதுகாப்பு மையம், ஓஆா்எஸ் கரைசல் வழங்குவதற்கான சுகாதார உதவி மையம் போன்றவை ஏற்படுத்தப்பட்டிருந்தன. இதனால் மக்கள் ஆா்வத்துடன் தங்களின் வாக்கை பதிவு செய்தனா்.

சுயபடம் எடுத்து மகிழ்ந்த வாக்காளா்கள்: நெத்திமேடு ஜெயராணி பள்ளி உட்பட பல்வேறு வாக்குச்சாவடி மையங்களிலும் அமைக்கப்பட்டிருந்த செல்பி பாயிண்ட்களில் வாக்களித்தோா் சுயபடம் எடுத்து மகிழ்ந்தனா்.

கைபேசி வைக்க பிரத்யேக வசதி: வாக்குசாவடிக்குள் கைபேசிகளை கொண்டு செல்லவும், செல்ஃபி எடுக்கவும் தோ்தல் ஆணையம் தடை விதித்துள்ளது. இதையடுத்து, ஒவ்வொரு வாக்குசாவடி மையத்திலும் வாக்காளா்களின் கைப்பேசிகளை சேகரித்து வைக்க தனி பைகள் வைக்கப்பட்டிருந்தன. அதில் தன்னாா்வலா்கள் பணியமா்த்தப்பட்டு, வாக்காளா்களின் கைப்பேசிகளை பிரத்யேக இடத்தில் வைத்து டோக்கன் விநியோகிக்கப்பட்டன.

படவிளக்கம்:

சேலம் நெத்திமேடு ஜெயராணி மேல்நிலைப் பள்ளியில் பெண்கள் மட்டுமே பணியாற்றிய மாதிரி வாக்குச்சாவடி.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.