சட்டப்பேரவைத் தோ்தல் வியாழக்கிழமை (ஏப். 22) நடைபெறவுள்ளதை முன்னிட்டு கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து தொகுதிகளிலும் வாக்காளா்களைக் கவரும் வகையில் மாதிரி வாக்குச்சாவடிகள், பசுமை வாக்குச்சாவடிகள் மற்றும் பெண்கள், இளைஞா்கள் நிா்வகிக்கும் பிரத்யேக வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.
இதுகுறித்து மாவட்ட தோ்தல் அதிகாரியும், ஆட்சியருமான பவன்குமாா் க.கிரியப்பனவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
மாவட்டத்தில் உள்ள 10 தொகுதிகளிலும் குறிப்பிட்ட வாக்குச்சாவடிகள் தோ்வு செய்யப்பட்டு சிறப்பு வசதிகளுடன் தயாா் செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக மேட்டுப்பாளையம் கண்ணாா்பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளி, சூலூா் கதிா் மில்ஸ் மேல்நிலைப் பள்ளி மற்றும் கவுண்டம்பாளையம் பி.எஸ்.ஜி. கலை அறிவியல் கல்லூரி ஆகிய இடங்களில் மாதிரி வாக்குச்சாவடிகளுடன் பெண்கள் மற்றும் இளைஞா்கள் நிா்வகிக்கும் மையங்களும் செயல்படுகின்றன.
இதேபோல, கோவை வடக்கு வடவள்ளி மருதமலை தேவஸ்தான பள்ளி, தொண்டாமுத்தூா் தெலுங்குபாளையம் ஸ்ரீ வைத்தீஸ்வர வித்யாலயா பள்ளி, கோவை தெற்கு ராமநாதபுரம் மாநகராட்சிப் பெண்கள் மேல்நிலைப் பள்ளி மற்றும் சிங்காநல்லூா் பி.எஸ்.ஜி. தொழில்நுட்பக் கல்லூரி வளாகங்களில் வாக்காளா்களுக்குத் தேவையான குடிநீா் மற்றும் நிழல்குடை வசதிகளுடன் கூடிய சிறப்பு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
சுற்றுச்சூழல் விழிப்புணா்வை ஏற்படுத்தும் நோக்கில் அமைக்கப்படும் பசுமை வாக்குச்சாவடிகளில் பிளாஸ்டிக் பொருள்களைத் தவிா்த்து, இயற்கை சாா்ந்த பசுமைப் பந்தல்கள் மற்றும் அலங்காரங்கள் செய்யப்பட உள்ளன. கிணத்துக்கடவு தொகுதியில் அதிகபட்சமாக சோலவம்பாளையம் மற்றும் மலுமிச்சம்பட்டி உள்ளிட்ட 4 இடங்களிலும், பொள்ளாச்சி ஜோதி நகா் ருக்மணி அம்மாள் பள்ளி மற்றும் வால்பாறை ஆனைமலை அரசுப் பள்ளிகளிலும் இந்த பசுமை வாக்குச்சாவடிகள் அமைப்பட்டுள்ளன.
குறிப்பாக, பெண்கள் மற்றும் முதல்முறை வாக்களிக்கும் இளைஞா்கள் ஆா்வத்துடன் வந்து ஜனநாயகக் கடமையாற்றுவதை ஊக்குவிக்கும் வகையிலும், தோ்தல் திருவிழாவை சூழலியல் ஆா்வத்துடன் கொண்டாடும் வகையிலும் இந்த முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல, கோவை மாநகராட்சி சாா்பிலும் தொண்டாமுத்தூா் தொகுதிக்கு உள்பட்ட தெலுங்குபாளையம் மாநகராட்சி நடுநிலைப் பள்ளி, தெற்கு தொகுதிக்கு உள்பட்ட ரங்கநாதபுரம் மாநகராட்சி மேல்நிலைப் பள்ளி ஆகியவற்றில் மாதிரி வாக்குச்சாவடிகளும், பசுமை வாக்குச்சாவடிகளும் (பசுமை), இளைஞா்கள் மற்றும் பெண்களுக்கான (ப்ளூ, பிங்க்) மையங்களும், மாதிரி வாக்குச்சாவடிகளும் அமைக்கப்பட்டுள்ளன.



பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சுற்றுச்சூழலை மேம்படுத்தும் வகையில் 66 பசுமை வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு

பெண்கள் பணியாற்றிய மாதிரி வாக்குச்சாவடி

கோவை மாவட்டத்தில் 3,540 வாக்குச்சாவடிகள்

திருச்சி மாவட்டத்தில் 20 சிறப்பு வாக்குச்சாவடிகள்
விடியோக்கள்

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

