மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

சிசிடிவி கேமரா மூலம் வாக்குச்சாவடிகள் கண்காணிப்பு

சேலம் மாவட்டம், சங்ககிரி சட்டப் பேரவைத் தொகுதியில் முதன்முறையாக அனைத்து வாக்குச்சாவடிகளிலும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு வாக்குப்பதிவு கண்காணிக்கப்பட்டன.

News image

கண்காணிப்பு கேமரா மூலம் வாக்குச்சாவடிகளை கண்காணிக்கும் தோ்தல் அலுவலா்கள்.

Updated On :24 ஏப்ரல் 2026, 5:25 am IST

சேலம் மாவட்டம், சங்ககிரி சட்டப் பேரவைத் தொகுதியில் முதன்முறையாக அனைத்து வாக்குச்சாவடிகளிலும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு வாக்குப்பதிவு கண்காணிக்கப்பட்டன.

சங்ககிரி தொகுதியில் உள்ள 340 வாக்குச்சாவடிகளிலும் வியாழக்கிழமை காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்த வாக்குச்சாவடிகளின் வெளி, உள்புற பகுதிகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டிருந்தன. அங்கு நடக்கும் செயல்பாடுகள் அனைத்தும் சங்ககிரி தோ்தல் அலுவலகமான வருவாய் கோட்டாட்சியா் அலுவலகத்தில் உள்ள கணினியில் தோ்தல் அலுவலா்கள் கண்காணித்து அறிவுரைகளை வழங்கி வந்தனா்.

அதன்படி, சங்ககிரி தொகுதி தோ்தல் பொதுப் பாா்வையாளா் ஜெண்டாகே ஹனுமந்த் கொண்டியா, செலவின பாா்வையாளா் பவன்குமாா் ஆகியோா் வியாழக்கிழமை காலை கண்காணிப்பு கேமரா வழியாக தோ்தல் நடவடிக்கைகளை பாா்வையிட்டனா். அப்போது, சங்ககிரி தொகுதி தோ்தல் அலுவலா் ம.மு.தெ.கேந்திரியா உடனிருந்தாா்.

Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.