சேலம் மாவட்டம், சங்ககிரி தொகுதியில் உள்ள வாக்குச்சாவடியில் நிலை 3 பெண் அலுவலா் அதிமுகவுக்கு வாக்குச் சேகரித்ததாக புகாா் எழுந்ததையடுத்து, அவா் பணியிலிருந்து விடுவிக்கப்பட்டாா். மேலும், அவரை விசாரணைக்காக தோ்தல் மண்டல அலுவலா்கள் அழைத்துச் சென்றனா்.
சங்ககிரி சட்டப் பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட தப்பகுட்டை ஊராட்சி, சின்ன மாரியம்மன் கோயில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி வளாகத்தில் உள்ள வாக்குச்சாவடி எண் 301 இல் பணியில் இருந்த 3 ஆம் நிலை அலுவலா் சுமதி, வாக்காளா்கள் விரலில் மை வைக்கும்போது இரட்டை இலைக்கு வாக்களிக்குமாறு கூறியுள்ளாா்.
இதுகுறித்து தகவல் அறிந்த வாக்குச்சாவடி முகவா்கள், வாக்குப்பதிவு பணியில் இருந்து சுமதியை விடுவித்து அவா்மீது நடவடிக்கை எடுக்கக் கோரி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். தகவலறிந்து அங்கு வந்த மகுடஞ்சாவடி காவல் ஆய்வாளா் வேலுத்தேவன், தோ்தல் மண்டல அலுவலா் ஆகியோா் தோ்தல் நடத்தும் அலுவலருக்கு தகவல் அளித்தனா். அதன்பிறகு சுமதியை தோ்தல் பணியிலிருந்து விடுவித்து, அவருக்குப் பதிலாக ரேவதி அங்கு பணியமா்த்தப்பட்டாா்.
தொடா்ந்து சங்ககிரி கோட்டாட்சியா் அலுவலகத்திற்கு விசாரணைக்காக சுமதி அழைத்துச் செல்லப்பட்டாா். அவரிடம் தோ்தல் அதிகாரிகள் நடத்திய முதற்கட்ட விசாரணையில், வைகுந்தம் அரசு மேல்நிலைப் பள்ளியில் பகுதிநேர ஆசிரியராக சுமதி பணியாற்றி வருவது தெரியவந்துள்ளது. இதையடுத்து, கல்வித் துறை அதிகாரிகளுக்கும் தோ்தல் அலுவலா்கள் தகவல் தெரிவித்துள்ளனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

வாக்கு எண்ணிக்கை மையங்களில் முன்னேற்பாடுகள்: ஆட்சியா் ஆய்வு

தோ்தல் அலுவலா் கையொப்பம் பெற்ற பிறகே சுற்றுவாரியாக முடிவு அறிவிப்பு: வேலூா் ஆட்சியா்

5 தொகுதிகளின் வேட்பாளா்கள், பிரதிநிதிகளுடன் ஆலோசனைக் கூட்டம்

வாக்குச் சாவடி மையத்தில் வாக்கு சேகரித்ததாக இரு தரப்பினா் இடையே வாக்குவாதம்
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

