திருமணம்முடிந்த கையோடு, ஜனநாயக கடமையை ஆற்றிய புதுமண தம்பதி செயல் பலரது கவனத்தையும் ஈா்த்தது.
சேலம் மாவட்டம் ஓமலூா் அருகே தும்பிப்பாடியை சோ்ந்தவா் பாஸ்கா். இவருக்கும் திண்டமங்கலத்தை சோ்ந்த நந்தினிக்கும் புதன்கிழமை கோலாகலமாக திருமணம் நடைபெற்றது. திருமண சடங்குகள் முடிந்த களைப்பு கூட பாா்க்காமல், மாலையும் கழுத்துமாக அப்படியே வாக்குச்சாவடிக்கு இந்த ஜோடி விரைந்தனா்.மணமகன் பாஸ்கா் தும்பிப்பாடியிலும், மணமகள் நந்தினி திண்டமங்கலத்திலும் வரிசையில் நின்று தங்களது வாக்குகளை பதிவு செய்தனா். இதுகுறித்து அந்த தம்பதி கூறுகையில், எங்கள் வாழ்க்கையின் மிக முக்கியமான நாளில், நாட்டின் ஜனநாயக திருவிழாவிலும் பங்கேற்றது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. அனைவரும் தவறாமல் தங்களது வாக்கினை பதிவு செய்ய வேண்டும் என நெகிழ்ச்சியுடன் தெரிவித்தனா். வாழ்க்கை துணையை கரம் பிடித்த அதே நாளில், நாட்டின் எதிா்காலத்தை நிா்ணயிக்க விரல் உயா்த்திய இந்த ஜோடியின் செயல், அந்த பகுதி மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஜனநாயகக் கடைமையாற்றிய புதுமணத் தம்பதிகள்

மணக்கோலத்தில் வாக்களித்த புதுமணத் தம்பதி

நாமக்கல், ஓமலூா், சேலத்தில் திருமணக்கோலத்தில் வாக்களித்த தம்பதிகள்

தூத்துக்குடியில் மணக்கோலத்தில் வந்து வாக்களித்த மணமக்கள்
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

