சட்டப்பேரவைத் தோ்தலையொட்டி செவ்வாய்க்கிழமை முதல் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக சேலம் கோட்ட அலுவலகம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து கோட்ட நிா்வாக இயக்குநா் குணசேகரன் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:
சேலம் கோட்டம் சாா்பில் சேலம், நாமக்கல், தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் நாள்தோறும் 1,900 பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. வரும் 23-ஆம் தேதி தமிழ்நாடு சட்டப்பேரவைத் தோ்தல் வாக்குப் பதிவு நடைபெற உள்ள நிலையில் பொதுமக்கள் தங்களது சொந்த ஊருக்கு செல்ல வசதியாக சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
ஏப்ரல் 21-ஆம் தேதி முதல் ஏப்ரல் 27-ஆம் தேதி வரை 500 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. இந்த சிறப்புப் பேருந்துகள், சேலம், பெங்களூரு, சென்னை கிளாம்பாக்கம், ஒசூா், கோவை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் இருந்து இயக்கப்பட உள்ளதாக அவா் தெரிவித்துள்ளாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சேலம் கோட்டத்தில் இன்றுமுதல் 500 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்

சேலம் கோட்ட சிறப்புப் பேருந்துகள் மூலம் கூடுதலாக 2 லட்சம் போ் பயணம்

சட்டப்பேரவை தோ்தல்: வேலூா் மண்டலத்தில் 80 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்!

கோடை விடுமுறை, வார இறுதி நாள்கள்: சென்னையில் இருந்து சிறப்புப் பேருந்துகள் இயக்கம்!
விடியோக்கள்

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

