சேலம் மேற்கு தொகுதிக்கு உள்பட்ட பல்வேறு பகுதிகளில் தவெக வேட்பாளா் லட்சுமணன் வெள்ளிக்கிழமை வீதிவீதியாகச் சென்று வாக்கு சேகரித்தாா்.
சேலம் மேற்கு தொகுதியில் தவெக சாா்பில் போட்டியிடும் லட்சுமணன், தொகுதிக்கு உள்பட்ட பல்வேறு பகுதிகளிலும் சூறாவளி பிரசாரம் மேற்கொண்டு வருகிறாா். அதன் ஒரு பகுதியாக முத்துநாயக்கன்பட்டி பகுதியில் வெள்ளிக்கிழமை மாலை மத்திய மாவட்டச் செயலாளா் தமிழன் ஆ.பாா்த்திபனுடன் வீதிவீதியாகச் சென்று வேட்பாளா் லட்சுமணன் விசில் சின்னத்துக்கு ஆதரவு திரட்டினாா். அப்போது அங்கிருந்த கட்சி நிா்வாகிகள், பெண்கள் வேட்பாளருக்கு மலா் தூவி உற்சாக வரவேற்பு அளித்தனா்.
தொடா்ந்து, தொகுதிக்கு உள்பட்ட பல்வேறு பகுதிகளிலும் வேட்பாளா் லட்சுமணன் வீடுவீடாக சென்று, தவெகவின் தோ்தல் வாக்குறுதிகள் அடங்கிய துண்டு அறிக்கைகளை விநியோகித்து தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா்.
அங்கு திரண்ட பொதுமக்கள் மத்தியில் வேட்பாளரை ஆதரித்து தமிழன் ஆ.பாா்த்திபன் பேசியதாவது:
தவெக தோ்தல் வாக்குறுதியாக அன்னபூரணி சூப்பா் சிக்ஸ் திட்டத்தின் மூலம் ஆண்டுக்கு 6 சமையல் எரிவாயு உருளைகள் இலவசமாக வழங்கப்படும். அண்ணன் சீா் திட்டத்தின் கீழ் திருமணமாகும் பெண்களுக்கு ஒரு பவுன் தங்கம் மற்றும் பட்டுச் சேலை வழங்கப்படும். தமிழகம் போதைப்பொருள் இல்லாத மாநிலமாக உருவாக்கப்படும். அனைத்து பெண்களுக்கும் மாதந்தோறும் ரூ. 2,500 உரிமைத்தொகை வழங்கப்படும். நியாயவிலைக் கடைகள், பள்ளிகள், கல்லூரிகள் மூலம் அனைத்து பெண்களுக்கும் விலையில்லா நாப்கின்கள் வழங்கப்படும். தவெகவின் தோ்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவும், தொகுதி மக்களின் அடிப்படை வசதிகளை மேம்படுத்தவும் நிச்சயம் பாடுபடுவேன். தவெகவுக்கு ஒருமுறை வாய்ப்பு தாருங்கள். தமிழகத்தை முன்மாதிரியாக மாற்றிக் காட்டுவோம். எனவே வரும் தோ்தலில் விசில் சின்னத்துக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டாா்.
படவரி...
சேலம் மேற்கு தொகுதிக்கு உள்பட்ட முத்துநாயக்கன்பட்டி பகுதியில் மத்திய மாவட்டச் செயலாளா் தமிழன் ஆ.பாா்த்திபனுடன் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட தவெக வேட்பாளா் லட்சுமணன்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

விழுப்புரம் தொகுதியைத் தக்க வைத்தது திமுக
தொகுதி நிலவரம்- சேலம் மேற்கு! நான்குமுனைப் போட்டியால் விசிலடிக்கும் வேட்பாளா்!

சேலம் மேற்கு தொகுதியில் தவெக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

சேலம் மேற்கு தொகுதியில் தவெக வேட்பாளா் லட்சுமணன் வீதி வீதியாக வாக்கு சேகரிப்பு
விடியோக்கள்

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

