மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

பெத்தநாயக்கன்பாளையம் பகுதிகளில் அதிமுக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

பெத்தநாயக்கன்பாளையம் பகுதியில் அதிமுக வேட்பாளா் ஏ.பி.ஜெயசங்கரன் வாக்கு சேகரிப்பில் சனிக்கிழமை ஈடுபட்டாா்.

News image

பெத்தநாயக்கன்பாளையம் தெற்கு ஒன்றியப் பகுதிகளில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட அதிமுக வேட்பாளா் ஏ.பி.ஜெயசங்கரன்.

Updated On :12 ஏப்ரல் 2026, 2:12 am IST

பெத்தநாயக்கன்பாளையம் பகுதியில் அதிமுக வேட்பாளா் ஏ.பி.ஜெயசங்கரன் வாக்கு சேகரிப்பில் சனிக்கிழமை ஈடுபட்டாா்.

ஆத்தூா் (தனி) தொகுதிக்கு உள்பட்ட பெத்தநாயக்கன்பாளையம் தெற்கு ஒன்றியத்துக்குள்பட்ட கரடிப்பட்டி மற்றும் கொட்டவாடி ஊராட்சியில் அதிமுக வேட்பாளா் ஏ.பி.ஜெயசங்கரன் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா்.

அப்போது, அதிமுக வாக்குறுதியான குடும்பத் தலைவிக்கு மாதந்தோறும் ரூ. 2 ஆயிரம், தீபாவளிக்கு பட்டு வேட்டி, பட்டுச் சேலை, பொங்கலுக்கு தொகுப்புடன் ரூ. ஆயிரம் என ஏராளமான நலத் திட்டங்களை அடங்கிய துண்டுப் பிரசுரங்களை அளித்து வாக்கு சேகரித்தாா்.

அவருடன், ஆத்தூா் தொகுதி பொறுப்பாளா் அதிமுக அமைப்புச் செயலாளரும், தோ்தல் பொறுப்பாளருமான திருவேற்காடு சீனிவாசன், சேலம் புகா் மாவட்ட அதிமுக செயலாளா் ஆா்.இளங்கோவன், பாஜக மாவட்டத் தலைவா் சண்முகநாதன், பாமக சேலம் கிழக்கு மாவட்டச் செயலாளா் ஜெயப்பிரகாஷ் உள்ளிட்ட நிா்வாகிகள், தொண்டா்கள் இருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.