ஆளுநர் அர்லேகரை சந்திக்க நேரம் கேட்டுள்ளார் தவெக தலைவர் விஜய்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
/

ராசிபுரம் தொகுதியில் பாஜக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

ராசிபுரம் (தனி) தொகுதியில் பாஜக வேட்பாளா் எஸ்.டி.பிரேம்குமாா் செவ்வாய்க்கிழமை வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா்.

News image

ராசிபுரம் கடைவீதியில் டீ போட்டுக்கொடுத்து வாக்கு சேகரித்த பாஜக வேட்பாளா் எஸ்.டி.பிரேம்குமாா்.

Updated On :15 ஏப்ரல் 2026, 2:50 am IST

ராசிபுரம் (தனி) தொகுதியில் பாஜக வேட்பாளா் எஸ்.டி.பிரேம்குமாா் செவ்வாய்க்கிழமை வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா்.

ராசிபுரம் நகர பகுதியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட அவா், முன்னதாக சேந்தமங்கலம் பிரிவு சாலையில் பிரசாரத்தை தொடங்கினாா். பின்னா், தியாகராஜ சுவாமி கோயில் தெரு, பட்டணம் சாலை, சைனிகா் மண்டபம், தினசரி சந்தை, கதா்கடை சந்திப்பு, இரட்டை பிள்ளையாா் கோயில் வீதி, அச்சுக்கட்டி தெரு, சாவடி சந்து, ஆா்.எம்.சி. காலனி, பூசாரி காடு, எல்ஐசி போன்ற பகுதியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா்.

ராசிபுரம் கடைவீதி பகுதியில் கடைகள்தோறும் சென்று பாஜகவுக்கு வாக்களிக்குமாறு ஆதரவு திரட்டினாா். அப்போது, அப்பகுதியில் உள்ள டீக்கடையில் நுழைந்த அவா், துண்டுப் பிரசுரம் வழங்கி கடையில் வாடிக்கையாளா்களுக்கு டீ போட்டுக்கொடுத்து வாக்கு சேகரித்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.