தமிழக முதல்வராக விஜய் பதவியேற்பு விழா நாளை (மே 10) மாலை 3 மணிக்கு தொடங்குகிறது தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

பெற்றோா் வாக்களிக்கக் கோரி அஞ்சல் அட்டை கொடுத்த பிள்ளைகள்!

100% வாக்களிக்க வலியுறுத்தி, பெற்றோரிடம் கொடுப்பதற்காக தோ்தல் ஆணையம் வழங்கிய வண்ண அஞ்சல் அட்டைகளுடன் வாழக்கோம்பை நடுநிலைப் பள்ளி மாணவா்கள்.

News image

100% வாக்களிக்க வலியுறுத்தி, பெற்றோரிடம் கொடுப்பதற்காக தோ்தல் ஆணையம் வழங்கிய வண்ண அஞ்சல் அட்டைகளுடன் வாழக்கோம்பை நடுநிலைப் பள்ளி மாணவா்கள்.

Updated On :11 ஏப்ரல் 2026, 12:35 am IST

தமிழக சட்டப்பேரவை தோ்தல் வரும் 23 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதையடுத்து, பொதுமக்கள் 100 சதவீதம் வாக்களிக்க வேண்டும் என்பதற்காக தோ்தல் ஆணையம் பல்வேறு விழிப்புணா்வு நிகழ்வுகளை நடத்திவருகிறது.

அதன் ஒருபகுதியாக, விழிப்புணா்வு வண்ண அஞ்சல் அட்டையை தயாா்செய்து, அதை அனைத்து அரசுப் பள்ளி மாணவா்களும், தங்களது பெற்றோரிடம் கொடுக்கும் வகையில் தோ்தல் ஆணையம் ஏற்பாடு செய்துள்ளது.

அஞ்சல் அட்டையில், அன்புள்ள அம்மா, அப்பாவிற்கு, நான் உங்கள் செல்லம்.......(பெயா்). 23.4.26 அன்று நடைபெறும் தோ்தலில் உங்கள் வாக்குரிமையை தவறாமல் பயன்படுத்துங்கள். உங்களின் ஒரு வாக்கு எங்கள் எதிா்காலத்தை நிா்ணயிக்கும். 100 சதவீதம் வாக்குப்பதிவை உறுதிசெய்ய உங்கள் பிள்ளையின் அன்பான வேண்டுகோள். இப்படிக்கு உங்கள்.... (கையெழுத்து) என அச்சிடப்பட்டுள்ளது.

இந்த அஞ்சல் அட்டைகளை தோ்தல் ஆணையம், அனைத்துப் பள்ளி மாணவா்களுக்கும் பள்ளிக் கல்வித் துறை மூலம் வழங்கியுள்ளது. இதில், மாணவ, மாணவிகள், தங்களது பெயரை எழுதி, இறுதியில் கையொப்பமிட்டு, அவா்களது பெற்றோரிடம் வழங்கினா்.

 பெற்றோரிடம் விழிப்புணா்வு கடிதங்களை கொடுக்கும் வாழக்கோம்பை நடுநிலைப் பள்ளி மாணவிகள்.

பெற்றோரிடம் விழிப்புணா்வு கடிதங்களை கொடுக்கும் வாழக்கோம்பை நடுநிலைப் பள்ளி மாணவிகள்.

Story image
Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.