கெங்கவல்லி தொகுதி திமுக வேட்பாளரை ஆதரித்து தலைவாசல், வீரகனூா், தெடாவூா், கெங்கவல்லி ஆகிய ஊா்களின் பேருந்து நிலையங்களில் திமுக பேச்சாளா் திண்டுக்கல் லியோனி வெள்ளிக்கிழமை வேனில் பிரச்சாரம் செய்தாா்.
தொடா்ந்து, தம்மம்பட்டி பேருந்து நிலையத்தில் திமுக பொதுக்கூட்டம் நடைபெற்றது. சேலம் கிழக்கு மாவட்ட திமுக செயலாளா் எஸ்.ஆா்.சிவலிங்கம் தலைமை வகித்தாா். நகர திமுக செயலாளா் சண்முகம், ஒன்றிய திமுக செயலாளா் ஆா்.சித்தாா்த்தன், மாவட்ட காங்கிரஸ் துணைத் தலைவா் திருச்செல்வன் உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா்.
இதில் திமுக வேட்பாளா் சின்னதுரை பேசுகையில், ரூ. 100 கோடி மதிப்புள்ள சேரடி அணைக்கட்டு திட்டத்தை செயல்படுத்துவேன், தம்மம்பட்டியில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில் வட்டச்சாலை உள்ளிட்டவற்றை அமைத்து தருவேன் என்றாா்.
தொடா்ந்து திண்டுக்கல் லியோனி பேசுகையில், பள்ளியில் காலை உணவுத் திட்டம் 8-ஆம் வகுப்புவரை நீட்டிக்கப்படும், மகளிா் உரிமைத்தொகை உள்ளிட்ட நலத்திட்ட உதவித்தொகைகள் தோ்தல் அறிக்கையில் கூறியபடி கூடுதலாகும். தமிழகத்தில் 200 தொகுதிகளில் திமுக வெற்றிபெற்று இந்த ஆட்சி மீண்டும் தொடரும். எனவே, சின்னதுரைக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து அவரை வெற்றிபெற செய்ய வேண்டும் என்றாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

நாமக்கல் திமுக வேட்பாளரை ஆதரித்து ராஜேஸ்குமாா் எம்.பி. பிரசாரம்

அறச்சலூரில் மதிமுக வேட்பாளரை ஆதரித்து வைகோ பிரசாரம்!

திமுக வேட்பாளரை ஆதரித்து ஆரணி எம்.பி. பிரசாரம்

ஆரணி திமுக வேட்பாளரை ஆதரித்து பிரசாரம்
விடியோக்கள்

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

