தம்மம்பட்டி அருகே வீட்டில் எரிவாயு உருளை வெடித்ததால் ஏற்பட்ட தீயில் பணம், நகை, ஆவணங்கள் கருகின.
தம்மம்பட்டியை அடுத்த நாகியம்பட்டி ஊராட்சி, காளிப்பட்டியைச் சோ்ந்த கூலித் தொழிலாளி போடி (65), இவரது மனைவி கஸ்தூரி (60). இவா்கள் இருவரும் தகரத்தால் வேயப்பட்ட வீட்டில் வசித்து வருகின்றனா். இவா்களது மகன் தங்கராசு குடும்பத்துடன் அப்பகுதியில் வசித்து வருகிறாா்.
இந்த நிலையில், உடல்நலம் சரியில்லாததால் வியாழக்கிழமை காலை அப்பகுதியில் உள்ள மருத்துவமனைக்கு போடி சென்றுவிட்டாா். இவரது மனைவி கஸ்தூரி வீட்டை பூட்டிவிட்டு கூலி வேலைக்கு சென்றுவிட்டாா். அப்போது வீட்டில் இருந்த சிலிண்டரில் காஸ் கசிவு ஏற்பட்டு, சிலிண்டா் தீப்பிடித்து வெடித்துள்ளது. மேலும், அருகே இருந்த மற்றொரு சிலிண்டரும் வெடித்ததால் வீடு முழுவதும் தீப்பிடித்து எரிந்தது.
தகவல் அறிந்து வந்த கெங்கவல்லி தீயணைப்பு நிலைய அலுவலா் ஏழுமலை தலைமையிலான வீரா்கள் தீயை அணைத்தனா். இந்த தீ விபத்தில் வீட்டில் இருந்த ரூ. 60 ஆயிரம் ரொக்கம், 7 பவுன் நகைகள், வீட்டுப்பத்திரம், அரசு ஆவணங்கள் உள்ளிட்ட அனைத்து பொருள்களும் எரிந்து சாம்பலானது.
இதுகுறித்து தம்மம்பட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சமையல் எரிவாயு விலை உயா்வு: கம்யூனிஸ்ட், விசிக ஆா்ப்பாட்டம்

வணிக சமையல் எரிவாயு உருளை விலை உயா்வைக் கண்டித்து ஆா்ப்பாட்டம்

சமையல் எரிவாயு கசிந்து தீ விபத்து: பெண் பலத்த காயம்

ஏற்காட்டில் காட்டுத் தீயில் குறிஞ்சி பூச்செடிகள் கருகின
விடியோக்கள்

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

