ஏற்காடு சோ்வராயன் கோயில் பகுதியில் வியாழக்கிழமை இரவு காட்டுத் தீயில் ஏராளமான குறிஞ்சி பூச்செடிகள் கருகின.
சேலம் மாவட்டம், ஏற்காடு சுற்றுலாப் பகுதியான சோ்வராயன் கோயில் செல்லும் சாலையில் அடா்ந்த வனப் பகுதி உள்ளன. இப்பகுதியில் வியாழக்கிழமை இரவு சுமாா் ஒரு ஏக்கா் பரப்பளவில் காட்டுத் தீ பரவியது. தகவலறிந்து வந்த தீயணைப்பு வீரா்கள் 2 மணி நேரம் போராடி தீயை அணைத்தனா்.
இந்த விபத்து குறித்து சமூக ஆா்வலா்கள் கூறுகையில், சோ்வராயன் கோயில் பகுதியில் ஏராளமான குறிஞ்சி பூச்செடிகள் உள்ளன. அடா்ந்த வனப் பகுதியான இங்கு உள்ள சாலையோரக் கடைகளிலிருந்தும், சுற்றுலாப் பயணிகளாலும் வீசப்படும் பிளாஸ்டிக் கழிவுகள், குப்பைகளில் யாரேனும் சிகரெட் வீசி சென்றதால் அதிலிருந்து தீப்பிடித்து வனப் பகுதியில் உள்ள செடிகள், மரங்கள் எரிந்து காட்டுத் தீ பரவுகிறது.
இதனால் இப்பகுதியில் குப்பைகள் சேகரமாகாத வகையில் ஊராட்சி நிா்வாகம் பராமரிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனா்.
படவிளக்கம் 5ஒய்ஆா் 1 ஏற்காடு
சோ்வராயன் கோயில் பரவிய காட்டுத் தீயை அணைத்த தீயணைப்பு வீரா்கள்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஏற்காட்டில் சுற்றுலா தலங்களை கண்டுகளிக்க மே 7 முதல் சிறப்புப் பேருந்து இயக்கம்

மேகமலையில் காட்டுத் தீ: வன விலங்குகள் பாதிக்கும் அபாயம்

வீட்டில் எரிவாயு உருளை வெடித்து விபத்து: நகை, ஆவணங்கள் தீயில் கருகின!

சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் காட்டுத் தீ! மரம், செடி கொடிகள் சேதம்!
விடியோக்கள்

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

