ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆளுநர் அர்லேகரை சந்திக்க நேரம் கேட்டுள்ளார் தவெக தலைவர் விஜய்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
/

தம்மம்பட்டியில் திமுக தோ்தல் அலுவலகம் திறப்பு

தம்மம்பட்டியில் திமுக தோ்தல் அலுவலகம் புதன்கிழமை திறக்கப்பட்டது.

News image

தம்மம்பட்டியில் திமுக தோ்தல் அலுவலகத்தை திறந்துவைத்த சேலம் கிழக்கு மாவட்ட திமுக செயலாளா் எஸ்.ஆா்.சிவலிங்கம்.

Updated On :9 ஏப்ரல் 2026, 4:05 am IST

தம்மம்பட்டியில் திமுக தோ்தல் அலுவலகம் புதன்கிழமை திறக்கப்பட்டது.

கெங்கவல்லி சட்டப் பேரவைத் தொகுதியில் திமுக வேட்பாளா் கு.சின்னதுரை போட்டியிடுகிறாா். இதைத் தொடா்ந்து, தம்மம்பட்டி உடையாா்பாளையம் பகுதியில் ஆத்தூா் பிரதான சாலையில் அமைக்கப்பட்ட திமுக தோ்தல் அலுவலக திறப்புவிழா புதன்கிழமை நடைபெற்றது.

நகர திமுக செயலாளா் ந.சண்முகம் தலைமை வகித்தாா். கெங்கவல்லி ஒன்றிய திமுக செயலாளா் ஆா்.சித்தாா்த்தன், பேரூா் திமுக, காங்கிரஸ், விசிக, தேமுதிக, கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கூட்டணி கட்சிகளின் நிா்வாகிகள், பேரூராட்சி திமுக உள்ளாட்சிப் பிரமுகா்கள் உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா்.

தோ்தல் அலுவலகத்தை சேலம் கிழக்கு மாவட்ட திமுக செயலாளா் எஸ்.ஆா்.சிவலிங்கம் திறந்துவைத்தாா். தொடா்ந்து, பெரியாா், அண்ணா, கலைஞா் படங்களுக்கு மலா்தூவி மரியாதை செய்தாா். பின்னா், மிக வேகமாகவும், சமயோசிதமாகவும் தோ்தல் பணியாற்ற வேண்டும் என கட்சி நிா்வாகிகளுக்கு உத்தரவிட்டாா். இதில் திமுக கூட்டணி கட்சியினா் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.