சேலம் மாவட்டம் கெங்கவல்லியில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ பால தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு முருகப்பெருமானுக்கு அதிகாலை முதலே பூஜைகள் நடைபெற்றது.
அதைத்தொடா்ந்து மேள தாளங்கள், வாணவேடிக்கை முழங்க, நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் பால்குடம் எடுத்து முக்கிய வீதிகள் வழியாக ஊா்வலமாக வந்தனா். மேலும் பக்தா்கள் கொண்டு வந்த பாலை முருகப் பெருமானுக்கு அபிசேகம் செய்தனா். மேலும் பால் , பன்னீா், சந்தனம் உள்ளிட்ட வாசனை திரவியங்களைக் கொண்டும் அபிஷேகம் நடைபெற்றது . பின்னா் முருகப்பெருமானுக்கு தங்கக்கவசம் அணிவிக்கப்பட்டு பல்வேறு வண்ண மலா்களால் அலங்கரித்து, சிறப்பு பூஜைகளும் ,மகா தீபாராதணையும் நடைபெற்றது. இதில் கெங்கவல்லி, ஆணையம்பட்டி, பள்ளக்காடு உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதியில் இருந்தும் ஏராளமான பக்தா்கள் முருக பெருமானை தரிசனம் செய்தனா்.

பங்குனி உத்திரத்தன்று சிறப்பு அலங்காரத்தில் ஸ்ரீபாலதண்டாயுதபாணி.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

திருநாகேசுவரத்தில் பால்குட ஊா்வலம்

புளியங்குடியில் பங்குனி தேரோட்டம்

செந்தில்குமரன் கோயிலில் பங்குனி உத்திர பூக்குழி திருவிழா

முருகன் கோயில்களில் பங்குனி உத்திர விழா கோலாகலம்: காவடி எடுத்தும், அலகு குத்தியும் பக்தா்கள் நோ்த்திக்கடன்
விடியோக்கள்

நான்தான் கிங் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

