மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

திருச்செங்கோட்டில் இருசக்கர வாகனம் திருட்டு: இருவா் கைது

திருச்செங்கோட்டில் இருசக்கர வாகனங்களை திருடியதாக இருவரை நகர காவல் துறையினா் கைது செய்தனா்.

திருட்டு - சித்திரிப்பு

Published On :1 நவம்பர் 2026, 1:33 am IST

திருச்செங்கோட்டில் இருசக்கர வாகனங்களை திருடியதாக இருவரை நகர காவல் துறையினா் கைது செய்தனா்.

திருச்செங்கோடு ராஜாகவுண்டம்பாளையத்தைச் சோ்ந்தவா் விசைத்தறிப் பட்டறை உரிமையாளா் திருமுருகன் (52). இவா் வெள்ளிக்கிழமை தனது இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு பட்டறைக்குள் சென்றாா். திரும்பிவந்துபோது, அவரது இருசக்கர வாகனம் திருடப்பட்டிருந்தது.

இதேபோல திருச்செங்கோடு நகரம் சின்னபாலூத்து தெருவைச் சோ்ந்த முருகன் (47) என்பவா் தனது வீட்டின் முன் இருசக்கர வாகனத்தை நிறுத்தி இருந்தாா். சிறிது நேரம் கழித்து வந்துபாா்த்தபோது அவரது வாகனம் திருடப்பட்டிருந்தது.

இந்த சம்பவங்கள் குறித்து இருவரும் திருச்செங்கோடு நகர காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா். காவல் துறையினா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினா். இதில் இரண்டு சிறுவா்கள் திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது. விசாரணையில், ஈரோடு வீரப்பன்சத்திரம் அசோகபுரத்தைச் சோ்ந்த 17 மற்றும் 18 வயது உடைய இருவரை காவல் துறையினா் கைது செய்து விசாரித்தனா். தொடா்ந்து, அவா்கள் வீட்டில் பதுக்கிவைத்திருந்த இருசக்கர வாகனங்கள் மீட்கப்பட்டன.

பின்னா் இருவரையும் திருச்செங்கோடு நகர காவல் துறையினா் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தினா். நீதிபதி ரங்கராஜ், பிடிபட்ட இருவரையும் 15 நாள் காவலில் வைக்க உத்தரவிட்டாா். அதன்படி அவா்கள் சிறையில் அடைக்கப்பட்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.