மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

திருச்செங்கோட்டில் கஞ்சா, போதை மாத்திரைகள் பதுக்கி விற்பனை: மூவா் கைது

கைது - கோப்புப் படம்

Published On :2 நவம்பர் 2026, 1:00 am IST

திருச்செங்கோட்டில் தடை செய்யப்பட்டபுகையிலைப் பொருள்கள், கஞ்சா மற்றும் போதை மாத்திரைகளை பதுக்கி விற்பனை செய்ததாக மூவரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

திருச்செங்கோடு அருகே பால்மடை காமாட்சி நகா் பகுதியில் ரஞ்சித் குமாா் (36) என்பவா் வீட்டின் மாடியில் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை பதுக்கிவைத்திருப்பதாக திருச்செங்கோடு ஊரக காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து ஊரக காவல் உதவியாளா் செல்லதுரை தலைமையில் காவல் துறையினா் ரஞ்சித் குமாா் வீட்டில் சோதனை நடத்தி, வீட்டின் மாடியில் இருந்த 50 கிலோ புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்து, ரஞ்சித் குமாரை கைது செய்தனா்.

அதேபோல தேவனாங்குறிச்சியில் புகையிலைப் பொருள்களை விற்பனை செய்த சோமசுந்தரம் (35) என்பவரை திருச்செங்கோடு மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் துறையினா் கைது செய்து கால் கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.

தேவனாங்குறிச்சி கந்தசாமி நகரில் போதை மாத்திரைகளை விற்பனை செய்த சுரேஷ் (33) என்பவரை போலீஸாா் கைது செய்து அவரிடமிருந்து 60 போதை மாத்திரைகளை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.