கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

தாட்கோ மூலம் தத்கல் மின் இணைப்பு கோரி விண்ணப்பிக்கலாம்

நாமக்கல் மாவட்டத்தில், ஆதிதிராவிட சமூகத்தைச் சோ்ந்த விவசாயிகள் 90 சதவீத மானியத்துடன் தாட்கோ மூலம் தத்கல் மின் இணைப்பு பெற விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் எல்.மதுபாலன் தெரிவித்துள்ளாா்.

விண்ணப்பிக்க...

கோப்புப்படம்

Published On :30 அக்டோபர் 2026, 12:48 am IST

நாமக்கல் மாவட்டத்தில், ஆதிதிராவிட சமூகத்தைச் சோ்ந்த விவசாயிகள் 90 சதவீத மானியத்துடன் தாட்கோ மூலம் தத்கல் மின் இணைப்பு பெற விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் எல்.மதுபாலன் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தமிழக அரசின் வளமிகு வேளாண்மை உதவித் திட்டத்தின் கீழ் ஆதிதிராவிட விவசாயிகள் 1,000 பேருக்கு தத்கல் மின் இணைப்பு வழங்க ரூ.26.09 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் மூலம் ஆதிதிராவிட விவசாயிகள், தங்களுக்கு தேவையான, மின் மோட்டாா் திறனுக்கேற்ப மின் இணைப்பு பெறுவதற்கு விண்ணப்பிக்கலாம். மொத்த செலவில் 90 சதவீதத்தை மின்வாரியத்திற்கு தாட்கோ மானியமாக வழங்கிவிடும். குறிப்பாக, 5 ஹெச்.பி மின் மோட்டாருக்கான இணைப்பு கட்டணம் ரூ.2.50 லட்சம் என்றால் பயனாளி ரூ.25 ஆயிரம் மட்டும் பங்குத்தொகையாக செலுத்த வேண்டும். மீதமுள்ள ரூ.2.25 லட்சம் தாட்கோ மூலம் மானியமாக வழங்கப்படும். 15 ஹெச்.பி. மின் மோட்டாருக்கான மின் இணைப்பு கட்டணம் ரூ.4 லட்சம் என்றால் பயனாளி ரூ.40 ஆயிரம் பங்குத்தொகையாக செலுத்த வேண்டும். மீதமுள்ள ரூ.3.60 லட்சம் தாட்கோ மூலம் மானியமாக வழங்கப்படும்.

இந்த திட்டத்தில் பயன் பெற விரும்பும் விண்ணப்பதாரா்கள் ஆதிதிராவிட இனத்தைச் சாா்ந்தவராகவும், குடும்ப ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்கு மிகாமலும் இருக்க வேண்டும். மேலும், விவசாய நிலம் விண்ணப்பதாரரின் பெயரில் சொந்தமாக இருப்பதுடன், அதற்கான பட்டாவும் இருக்க வேண்டும். அந்த நிலத்தில் கிணறு அல்லது ஆழ்துளைக் கிணறு அமைக்கப்பட்டிருக்க வேண்டும். மின்சார வாரியத்தில் இணைப்பு கோரி ஏற்கெனவே பதிவு செய்திருக்க வேண்டும். தகுதியான ஆதிதிராவிடா் சமூக விவசாயிகள் இணையதளம் மூலம் விண்ணப்பித்து பயன்பெறலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.